சென்னை: 'கருகரு கருப்பாகி' என்ற பாடலைக் கேட்டதுமே இன்றைய தலைமுறைக்கு முதலில் நினைவுக்கு வருவது 'லியோ' படத்தில் தளபதி விஜய் ஆடும் அந்த அதிரடி ஆட்டம் தான். ஆனால், அந்தப் பாடல் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான ஏழையின் சிரிப்பில் என்ற திரைப்படத்தில் நடிகை ரோஜாவும், பிரபுதேவாவும் சேர்ந்து ஆட்டம் போட்டு இருப்பார்கள். அந்தப் பாடல் என்னவென்றே தெரியாத இன்றைய காலத்து ஜென்சி கிட்ஸ்களுக்கு, அந்தப் பழைய பாடலைத் தனது படத்தின் மூலம் நினைவூட்டி மீண்டும் ட்ரெண்டாக்கினார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்போதும் அந்தப் பாடல் சோசியல் மீடியாவில் ஒரு மெகா ஹிட் பாடலாகத்தான் இருந்து வருகிறது.
ரத்தம் கொட்டுச்சு: அண்மையில் நடிகை ரோஜா அளித்த பேட்டியில், அந்தக் 'கருகரு கருப்பாகி' பாடலில் கயிறு போட்டு இழுப்பது போன்ற ஒரு காட்சி இருக்கும். அந்தச் சீனிற்காக நான் பிளவுஸை கழுத்தை ஒட்டி இருப்பது போலப் போட்டிருந்தேன். அந்தக் கயிற்றைக் கொண்டு இழுத்தபோது, என் சோல்டரில் கயிறு பட்டு கட் ஆகிவிட்டது. அங்கிருந்து அப்படியே ரத்தம் கொட்டியது. ஆனாலும், அந்த ஷாட் திரையில் நன்றாக வரவேண்டும் என நினைத்துக் கொண்டு, அந்த வலியைக்கூடப் பொருட்படுத்தாமல் அந்தப் பாடலை நடித்து முடித்தேன். ஏனென்றால், ஒரு காட்சி படமாக்கப்படுகிறது என்றால் அது 100 வருடம், 200 வருடம் ஆனாலும் திரையில் அப்படியே அழியாமல் இருக்கும். அதனால் எனக்கு அடிபட்டாலும் சரி, காய்ச்சல் வந்தாலும் சரி, எப்படி இருந்தாலும் படப்பிடிப்பிற்கு வந்துவிட்டால் ஆன்ஸ்கிரீனில் மட்டுமே என் கவனம் இருக்கும். இதனால், இன்றைக்கு அந்தப் பாட்டைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு முதுகில் கட் ஆகி ரத்தம் சொட்டிய தான் நினைவுக்கு வரும்.
போதும் போதும்னு ஆகிடுச்சு: அதேபோல 'காதல் வானிலே காதல் வானிலே' என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால், அந்தப் பாடலை எடுக்கும் போது நாங்கள் மிக மிகச் சிரமப்பட்டுத்தான் எடுத்தோம். ஏனென்றால், ஒவ்வொரு சீனுக்கும், ஒவ்வொரு லோகேஷன், ஒவ்வொரு டிரஸ் மாற்ற வேண்டும். ஒரு சீனை முடித்துவிட்டு அடுத்ததாக உடனடியாக வேறு ஒரு லொகேஷனுக்கு ஓட வேண்டும். அந்தப் பாடலை முழுமையாக முடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. அந்த அளவுக்கு அந்தப் பாடலில் சிரமப்பட்டோம். ஆனால், திரையில் அந்தப் பாடலைப் பார்க்கும்போது அந்தச் சிரமம் எதுவுமே தெரியாது. அதுதான் சினிமா என்றார்.
நடிகை ரோஜா பேட்டி: செம்பருத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி, 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்து பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் நடிகை ரோஜா. ஆர்.கே.செல்வமணியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இவர், ஆந்திர அரசியலிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். சினிமாவில் நீண்ட நாட்களாகத் தென்படாமல் இருந்த ரோஜா, தற்போது 'அன்பே டயானா' என்கின்ற திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்தத் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசிய ரோஜா, தனது சினிமா பயணத்தில் ஏற்பட்ட பல சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
More Articles
- அமைதியா இருந்த விஜய் பிச்சி உதறுறார்.. அவர் முதலமைச்சரானது எனக்கு ஆச்சரியம்.. ரோஜா பேட்டி!
- Anbe DIana Review: அன்பே டயானா விமர்சனம்.. காதலுக்கு சாதி, மதம் எதுவும் தடையில்லை.. தைரியமா சொல்லுங்க!
- Anbe Diana: அன்பே டயானாவை ரசித்து ரசித்து விமர்சனம் செய்த நெட்டிசன்.. அடேங்கப்பா படம் ஹிட்டுடோய்
- மகள் வாங்கிய உயரிய விருது.. ஆஸ்கர் மாதிரியாம்.. பெருமை பொங்க மனம் திறந்த ரோஜா
- ரோஜா மகனுக்கு 20 வயதா?.. களைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்.. யப்பா வேற லெவல்
- Summer Special: கல்யாணம் ஆனா என்ன? பீச்சில் காத்து வாங்கும் பிரியங்கா நல்காரி லேட்டஸ்ட் போட்டோஸ்!