சென்னை: வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்களை நடத்துவதில் முன்னணியில் இருக்கும் விஜய் தொலைக்காட்சி, தற்போது 'செகண்ட் லவ்' என்ற புதிய நிகழ்ச்சியைக் கையில் எடுத்துள்ளது. காதல் பிரேக்-அப்பான 6 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் என மொத்தம் 12 பேரை ஒரே வீட்டிற்குள் தங்க வைத்து, அவர்களுக்குள் மீண்டும் காதலைத் துளிர்க்க வைப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்கும், இந்த நிகழ்ச்சியின் புரோமோ வெளியானதில் இருந்தே நெட்டிசன்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
கொந்தளித்த பயில்வான்: இந்த நிகழ்ச்சி குறித்துப் பேசிய சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன், அந்தச் சேனல் இது போன்ற மோசமான ஒரு நிகழ்ச்சியை ஒருபோதும் ஒளிபரப்பக் கூடாது. இந்த நிகழ்ச்சியால் சமுதாயத்திற்கு என்ன பெரிதாக நன்மை நடந்துவிடப் போகிறது? இந்த நிகழ்ச்சியை குடும்பத்தோடு அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்க முடியுமா? தேவையே இல்லாமல் அந்தத் தொலைக்காட்சி 'செகண்ட் லவ்' என்ற பெயரில் இப்படியொரு நிகழ்ச்சியை ஆரம்பிக்கிறது. உண்மையில் காதலில் தோற்று நொந்து போனவன் எவனாவது போய் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வானா? அப்படிப் பார்க்கும்போது இது எல்லாமே வெறும் செட்டப் தான்.
சென்சார் கண்டிப்பா வேணும்: மக்கள் பார்க்கும் இந்த மாதிரியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குக் கண்டிப்பாகச் சென்சார் கட்டுப்பாடு தேவை. எதை மக்களிடம் சேர்க்க வேண்டும், எதை மக்களிடம் கொண்டு செல்லக்கூடாது என்ற ஒரு வரைமுறை நமக்கு வேண்டும். இப்போது தமிழகத்தின் முதலமைச்சராகச் சினிமா துறையைச் சேர்ந்த ஜோசப் விஜய் இருக்கிறார். இது போன்ற மோசமான கலாச்சாரச் சீரழிவு நிகழ்ச்சிகளை நடத்துவதற்குத் தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது. அல்லது சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிர்வாகத்தினரை நேரில் அழைத்து உடனடியாகக் கண்டிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை எனப் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியே பல்வேறு சண்டைகள் மற்றும் சர்ச்சைகளைச் சந்தித்து வரும் வேளையில், இந்த 'செகண்ட் லவ்' நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே பெரும் விவாதத்தைக் கிளப்பி உள்ளது.
More Articles
- செகண்ட் மேரேஜுக்கு ஆள் பிடிக்கும் ஷோவா? 'செகண்ட் லவ்' ஷோவை வெளுத்துவாங்கும் நெட்டிசன்ஸ்!
- Bigg Boss Tamil 10: பிக் பாஸ் தமிழ் சீசன் 10.. கிராண்ட் லான்ச் எப்போ தெரியுமா?.. ஏகப்பட்ட ஸ்பெஷல்!
- விஜய் TV 18+ சர்டிஃபிகேட் வாங்கிட்டாங்களா? Second Love ப்ரோமோவால் வந்த விவாதம்.. உண்மை என்ன?
- Second Love ப்ரோமோவை இறக்கிய விஜய் டிவி.. வெச்சு விளாசிய நெட்டிசன்ஸ்.. என்ன கான்செப்ட்டு இது?
- பிக் பாஸ் பிரபலம் ’விக்கல்ஸ்’ விக்ரம் ஹீரோவாக நடிக்கும் படம் என்ன ஆச்சு?.. சூடான அப்டேட் இதோ!
- கடின உழைப்புக்குக் கிடைத்த பரிசு.. புது வீட்டுக்குக் குடியேறிய விஜய் டிவி தங்கதுரை!