சென்னை: விஜய் படங்களிலேயே பகவதி படத்துக்குப் பிறகு ஜன நாயகன் படத்துக்குத்தான் 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்திற்கு கூட 'ஏ' சான்றிதழ் வழங்கப்படவில்லை. லியோவை விட ஜன நாயகன் அவ்வளவு வயலன்ஸாகவா உள்ளது என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன.

Advertisement

படம் வெளியான பின்னர் அளித்த பேட்டியில் இயக்குநர் எச். வினோத் ஜன நாயகன் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்குவார்கள் என்று தெரியாதா? இவ்ளோ வயலென்ஸ் காட்சிகளை வச்சிருக்கீங்களே என்கிற கேள்விக்கு அளித்துள்ள பதில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

Advertisement

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் தலை வெட்டுற சீன் உள்ளது. ஆனால், அந்த படத்துக்கு யு/ஏ சான்றிதழ் தானே கொடுத்தனர் என பதிலுக்கு எச். வினோத் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்சார் போர்டே தேவையில்லை: ஓடிடிக்கள் பெருகிவிட்ட இந்த காலத்தில் வீட்டிலும், செல்லும் இடங்களில் எல்லாம் நெட்பிளிக்ஸ், பிரைம், ஜீ5, ஹாட்ஸ்டார் என ஏகப்பட்ட ஓடிடி சேனல்களில் எந்தவொரு சென்சாரும் இல்லாமல் நிர்வாணக் காட்சிகள் முதல் அதீத வயலென்ஸ் காட்சி வரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கத் தொடங்கி விட்டனர். இந்த காலத்தில் தியேட்டருக்குப் போகும் ரசிகர்களுக்கு மட்டும் ஏன் சென்சார் போர்டு என பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாவே கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை கிளப்பியது.

Advertisement

ஜெயிலர் படத்தில் இல்லையா?: ஜன நாயகன் படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக் காட்சிகளில் விஜய் கையை வெட்டுவது, காலை வெட்டுவது, தலையை வெட்டுவது என ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார். அதனால் தான் படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். படம் எடுக்கும் போதே உங்களுக்கு இதெல்லாம் தெரியாதா? என்கிற கேள்விக்கு பதில் அளித்த எச். வினோத் பாலய்யாவின் டாக்கு மகராஜ், தமிழில் ரஜினிகாந்தின் ஜெயிலர் போன்ற படங்களிலும் தலை வெட்டுற சீன் உள்ளது. ஆனால், அதற்காக அந்த படங்களுக்கு எல்லாம் ஏ சான்றிதழ் வழங்கினார்களா? இந்த படத்துக்கே ஆரம்பத்தில் யு/ஏ கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாகத்தான் ஏ சான்றிதழ் வழங்கினர். அப்படியே தலை வெட்டுற சீன் நீக்க வேண்டுமென்றால் கூட நீக்குகிறேன் என்று சொல்லியும் ஏ சான்றிதழ் தான் தருவோம் என்றார்கள் என சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கியது குறித்து எச். வினோத் போட்டு உடைத்துள்ளார்.

Advertisement

லியோவுக்கே யு/ஏ தான்: த்ரிஷாவுடன் லிப் லாக், கெட்ட வார்த்தை, அதிகப்படியான ஆக்ரோஷமான சண்டைக் காட்சி, படத்தின் கதையே போதைப் பொருள் ஒழிப்பு என பல விஷயங்கள் இருந்தும் விஜய்யின் லியோ படத்துக்கு கூட யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. அதே ஆண்டு வெளியான ஜெயிலர் படத்துக்கும் யு/ஏ வழங்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் கூலி படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. அதே போல தற்போது ஜன நாயகன் படத்துக்கும் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். படங்களை இயக்குபவர்கள் இனிமேல் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதே இவை உணர்த்துகின்றன.