சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சராக தளபதி விஜய் மாறிய நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் விஜய் நடிக்கும் டைட்டில் கார்டுடன் ஜன நாயகன் திரைப்படம் வரும் ஜூலை 23ம் தேதி வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Advertisement

தளபதி படம் வந்தா தள்ளிப் போய் தானே ஆகணும் என ஜி.வி. பிரகாஷும் அடுத்த வாரம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்த தனது படத்தை தள்ளிப் போட்டுவிட்டார். ஜூலை 31ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட டிசி மற்றும் சிக்மா உள்ளிட்ட படங்களின் ரிலீஸும் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதவன் இந்த வாரமே ஜிடி நாயுடு பயோபிக் படத்தை வெளியிடாமல் அடுத்த மாதத்திற்கு தள்ளிப் போட்டுள்ளார்.

Advertisement

Photo Credit:

அதான் 1.2 கோடி பேர் லீக்கான ஜன நாயகன் படத்தை திருட்டுத்தனமாக பார்த்து விட்டார்களே தியேட்டரில் படம் ஓடுமா? என்கிற கேள்விக்கு ஜன நாயகன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா "தம்பி இது தளபதி படம்.. லீக்கான படத்தின் கிளைமேக்ஸுக்கு பதில் தியேட்டரில் புது கிளைமேக்ஸ் இடம்பெறும்" என ஒரே போடாக போட்டுள்ளார்.

ஏ சான்றிதழ்: குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் படங்களையே விஜய் பல காலமாக நடித்து வருகிறார். பகவதி படத்துக்குத்தான் முதல் முறையாக அவருக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. பகவதி படத்தை பார்க்காத குழந்தைகளே இருக்க மாட்டார்கள் என்கிற அளவுக்கு பல முறை அந்த படத்தை டிவியில் பார்த்திருப்பார்கள். இந்நிலையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு குட் டச், பேட் டச் விஷயங்களை சொல்லிக் கொடுத்து இளம் பெண்கள் பலமானவர்களாக மாற வேண்டும் என்கிற பாடத்தை எடுத்த பகவந்த் கேசரி படத்தை தழுவி எடுக்கப்பட்ட ஜன நாயகன் படத்துக்கு தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. ஜன நாயகன் படத்தை தியேட்டரில் மிஸ் செய்தாலும் குழந்தைகள் ஓடிடியில் சீக்கிரமே பார்த்து விடுவார்கள் என்பது தனிக்கதை.

Advertisement

ஜன நாயகன் கிளைமேக்ஸ் மாற்றம்: ஒட்டுமொத்த ஜன நாயகன் படமே லீக்கான நிலையில், படக்குழுவே அதிர்ச்சியில் உறைந்து போனது. படத்திற்கு சென்சார் சான்றிதழ் உரிய நேரத்தில் வழங்காமல் காலம் தாழ்த்தப்பட்டதும் விஜய்யை சுற்றிய அரசியல் காழ்ப்புணர்ச்சிகளும் தான் ஜன நாயகன் படத்தின் ரிலீஸுக்கு தடையாக இருந்ததாக கூறப்படுகிறது. முதலமைச்சராக விஜய் தரப்பே திட்டமிட்டு படத்தை லீக் செய்ததாகவும் எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை அடுக்கின. இந்நிலையில், 1.2 கோடி பேர் பார்த்த படத்தை மீண்டும் எப்படி தியேட்டரில் பார்ப்பார்கள் என்கிற கேள்விக்கு படத்தில் பல விஷயங்களை மாற்றியுள்ளோம் என்றும் குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சி மாற்றப்பட்டு கூடுதலாக 41 நொடிகளுக்கு சென்சாரும் செய்யப்பட்டுள்ளதாக கேவிஎன் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தெரிவித்துள்ளார்.

Advertisement

விஜய்யின் கடைசி படம்: அப்பா இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் 1984ல் வெளியான 'வெற்றி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் விஜய். அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 'நாளைய தீர்ப்பு' படத்தில் ஹீரோவாக மாறிய விஜய் தமிழ் சினிமாவில் இளைய தளபதி, தளபதி என வளர்ச்சியடைந்தார். இப்போ தமிழ்நாட்டின் முதலமைச்சராக உச்சம் தொட்டுள்ள விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகன் வெளியாக உள்ள நிலையில், கண்டிப்பாக மக்கள் வெள்ளம் ஜன நாயகன் படத்தை திரையரங்குகளில் பார்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் கருப்பு படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு அதிக வசூல் ஈட்டும் படமாக ஜன நாயகன் மாறுமா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.