அஸ்வின் குமார், லாஸ்லியாவின் ஜோடி எப்படி இருக்கு? பேபி நீ சுகர் ஆல்பம் பாடலை வெளியிட்ட சிம்பு!
சென்னை: புதிய பிக் பாஸ் ஹோஸ்ட் ஆன நிலையில், நடிகர் சிம்பு பழைய பிக் பாஸ் போட்டியாளர் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் ஆல்பத்தை ரிலீஸ் செய்து அசத்தி உள்ளார்.
ஒரே ஒரு இசை வெளியீட்டு விழாவில் அஸ்வின் குமார் பேசியதை ஓவராக ட்ரோல் செய்து அவரை ஓரங்கட்டிய நிலையில், விடா முயற்சியுடன் மீண்டும் வருவேன் என பேபி நீ சுகர் ஆல்பம் பாடல் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார் அஸ்வின் குமார்.
குட்டி பட்டாஸ், அடிபொலி என ஏகப்பட்ட ஹிட் ஆல்பம் பாடல்களை கொடுத்த அஸ்வினின் அடுத்த ஆல்பம் பாடல் பட்டையை கிளப்பி வருகிறது.

சர்ச்சையான பேச்சு
குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்து கொண்டு மக்கள் மனங்களை கொள்ளையடித்தவர் அஸ்வின் குமார். அவர் ஹீரோவாக நடித்த என்ன சொல்ல போகிறாய் படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் இந்த படத்திற்கு முன்னதாக 40 கதைகளை கேட்டு தூங்கியிருக்கேன் என பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அஸ்வினுக்கு எதிரான ட்ரோல்கள் டிரெண்டாகின.

ஆல்பம் ஹீரோ
குட்டி பட்டாஸ், அடிபொலி என ஏகப்பட்ட ஆல்பம் பாடல்களை போட்டு ஹிட் கொடுத்து வரும் அஸ்வின் குமார் சரியான கம்பேக் கொடுக்க தனக்கு தெரிந்த ரூட்டையே மீண்டும் ஃபாலோ செய்துள்ளார். பேபி நீ சுகரு எனும் இன்னொரு ஆல்பம் பாடலை தற்போது ரிலீஸ் செய்துள்ளார் அஸ்வின் குமார்.

லாஸ்லியா ஜோடி
அஸ்வின் குமாருடன் ஏற்கனவே சோப்பு விளம்பரத்தில் நடித்து அசத்திய பிக் பாஸ் சீசன் 3 பிரபலம் நடிகை லாஸ்லியா அஸ்வின் உடன் இணைந்து இந்த ஆல்பம் பாடலில் ஆடி பாடி அசத்தி உள்ளார். இருவரும் கலர்ஃபுல்லாக உடையணிந்து ஆல்பம் பாடல் முழுக்க ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளனர்.

ரிலீஸ் செய்த சிம்பு
புதிய பிக் பாஸ் ஹோஸ்ட்டாக மாறியுள்ள சிம்பு பிக் பாஸ் பிரபலமான லாஸ்லியா மற்றும் குக் வித் கோமாளி பிரபலாமன அஸ்வின் குமாரின் இந்த லேட்டஸ்ட் கலர்ஃபுல் ஆல்பம் பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் அடிக்க தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
சின்சான்
குழந்தைகளை கவரும் விதமாக இந்த காதல் பாடலில் சின்சான், மோட்டு பட்லு, டோரேமான் உள்ளிட்ட ஏகப்பட்ட கார்ட்டூன் பொம்மைகளும் டான்ஸ் ஆடுவது சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது. க்யூபிட் கடவுளாக வரும் அந்த குட்டிக் குழந்தை விருத்தி பாப்பாவை ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர். ஓஷோ வெங்கட் இந்த பாடலை இசையமைத்து பாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications











