சர்கார் பட வேலைகள் ஒருபுறம்.. ’நோட்டா’ படம் மூலம் நடிகரான ஏ.ஆர்.முருகதாஸ்!


சென்னை: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நோட்டா படம் மூலம் நடிகராக மாறியுள்ளார்.

தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் கஜினி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது இவர் விஜய் நடிப்பில் சர்கார் படத்தை இயக்கி வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தமாதம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

சர்க்கார்

பல்வேறு யூகங்கள்

பல்வேறு யூகங்கள்

பல்வேறு யூகங்கள் சர்கார் படத்தில் விஜய் அரசியல்வாதியாக நடிக்கிறார், முதல்வராக வருகிறார் என பல்வேறு யூகங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இதனால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.

முருகதாஸ்

நடிகரான முருகதாஸ்

நடிகரான முருகதாஸ்

இந்நிலையில், சர்கார் பட வேலைகளுக்கு இடையே தனது உதவி இயக்குநரின் படம் மூலம் நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார் முருகதாஸ். இயக்குனர் அனந்த் சங்கர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இவர் தற்போது நோட்டா என்ற படத்தை இயக்கி வருகிறார்.

சிறிய காட்சி

நடிகராகவே நடிக்கிறார்

நடிகராகவே நடிக்கிறார்

அர்ஜூன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்துள்ள இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வருகிறது. இப்படத்தில் சிறிய காட்சி ஒன்றில் முருகதாஸ் நடித்துள்ளார். படத்தில் அவர் நடிகராக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

புகைப்படம்

இயக்குனர் வெளியிட்ட புகைப்படம்

இது தொடர்பாக படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அனந்த் சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே, தமிழ் சினிமாவில் பாக்யராஜ், பாண்டியராஜன், பாரதிராஜா, எஸ்.ஏ.சூர்யா, பார்த்திபன், சேரன் என இயக்குநராக இருந்து நடிகராக மாறியவர்கள் பட்டியல் நீளமானது. தற்போது இதில் ஏ.ஆர்.முருகதாஸும் இணைந்துள்ளார்.

Have a great day!
Read more...

English Summary

The famous Tamil director A.R.Murugadoss is acting in the sensational political thriller 'Nota', starring Vijay devarakonda in the lead role.