சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராகியிருக்கும் விஜய்; அந்த வேலைகளில் பரபரப்பாகியிருக்கிறார். நேற்றுகூட எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு திடீரென ஆய்வுக்கு சென்றார். அது அங்கிருந்தவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவரது செயல்பாடுகள் ஒருதரப்புக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும்; இன்னொரு தரப்பினரிடம் விமர்சனத்தை எழுப்பியிருக்கிறது. இந்நிலையில் அவரது நண்பரும், நடிகருமான சஞ்சீவ் இதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார்.
நடிகராக இருந்த விஜய் சில வருடங்களுக்கு முன்பு கட்சி ஆரம்பித்தார். கட்சி ஆரம்பித்த சில வருடங்களிலேயே சந்தித்த தேர்தலில் வென்று முதலமைச்சராகவும் மாறிவிட்டார். சி.எம் ஆனதிலிருந்து மும்முரமாக உழைத்துவருகிறார். நீண்ட வருடங்களாக இருந்த பேருந்து கோரிக்கைகள் உள்ளிட்டவைகள் எல்லாம் பல ஊர்களில் தீர்க்கப்பட்டுவருகின்றன. அதேபோல் அரசு நிர்வாகங்களில் லஞ்சம், ஊழல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஒழிந்துவருகிறது என்பதும் பலரது கருத்தாக இருக்கிறது.
அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் செயல்பாடுகள்: நேற்றுகூட முதலமைச்சர் விஜய் எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கேதான் அவர் பிறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது ஒருபக்கம் இருக்க அவரது அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் செய்யும் செயல்கள் தொடர்ந்து கிண்டல்களை சந்தித்துவருகின்றன. சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் கீர்த்தனா; அரசு பள்ளிக்கு சென்று செய்த ஆய்வும், சிறுமியிடம் கேள்வி கேட்ட் விதமும் விமர்சனத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
எம்.எல்.ஏ வாங்கிய பல்பு: அது முடிந்த கையோடு ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சாலையில் சென்ற லாரியை நிறுத்தி டயர் சரியில்லை என்று சொல்ல; லாரிக்கு சம்பந்தப்பட்ட ஒருவர் அளித்த பதிலோ, 'உங்களுக்கு ஒன்றும் தெரியமாட்டேன் என்கிறது. நீங்கள் ஃபோனை வையுங்கள்' என சொன்னது காலையிலிருந்து வைரல். இப்படி தொடர்ச்சியாக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் இப்படி செய்வதை விஜய் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்திருக்கின்றன.
சஞ்சீவ் விளக்கம்: இந்நிலையில் விஜய் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு அவரது நண்பரும், நடிகருமான சஞ்சீவ் விளக்கமளித்திருக்கிறார். சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "விஜய்யை ஆரம்பகாலத்தில் நிறைய கிண்டல் செய்தார்கள். அது அவரை அழ வைத்திருக்கிறது. சமீபத்தில்கூட ஒரு பத்திரிகையாளர், 'விஜய் சி.எம் ஆன பிறகு 500 கோடி ரூபாயை சஞ்சீவ் வீட்டில்தான் வைத்திருக்கிறார்கள்' என சம்பந்தமே இல்லாமல் சொல்கிறார்.
முதலமைச்சரான பிறகும்: இப்போது அவர் முதலமைச்சராகிவிட்டார். இப்போது அவரை சந்திக்க சென்றாலும் வாசல் வரை வந்து அனுப்பிவிடுவார். அவர் நிறைய நல்லது செய்திருக்கிறார். ஆனால் அது முழுவதும் வெளியே வரவில்லை. கால்வாசிதான் வெளியே வந்திருக்கிறது. உதவ வேண்டும் என்ற எண்ணம் அப்போதிருந்து இப்போதுவரை இருக்கிறது" என்றார். அவரது இந்தப் பேச்சு விஜய் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. மேலும், எவ்வளவுதான் விஜய்யை கிண்டல் செய்தாலும் அவருக்கென்று ஒரு படை இருக்கும்வரை யாரும் எதுவும் செய்ய முடியாது என்றும் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.
More Articles
- ஜன நாயகன் சென்சார்.. எல்லாமே கம்பி கட்ற கதை.. தயாரிப்பாளர்களை பயமுறுத்துறாங்க.. பிரபலம் பகீர்!
- 2031ல் தனுஷ் தான் சிஎம்.. ரூட்டு பக்காவா இருக்காம்.. தனுஷ் ரசிகர்களின் பலே திட்டம்!
- கணவரை விட நான்.. ரசிகையிடம் ஷாருக்கான் அப்படி பேசினாரா? SVe சேகர் பகிர்ந்த போஸ்ட் உண்மையா?
- உங்க பெயரை சொன்னாலே விசில் சத்தம் தான் தல.. பிறந்த நாள் வாழ்த்து சொன்ன CM விஜய்!
- அமைச்சர் கீர்த்தனா செயல்பாட்டில் லஞ்சம், ஊழல் துளியும் இல்லை.. சீனு ராமசாமி சொன்ன பதில்!
- கீர்த்தி சுரேஷ் திருமணத்திலேயே விஜய்யிடம் சொன்னேன்.. லிங்குசாமி ஓபன் டாக்.. சொல்லி அடிச்சிருக்காங்க