சென்னை: நடிகர் விமலுக்கு எதிராக தொடரப்பட்ட ரூ.4.5 கோடி செக் மோசடி வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அதே நேரத்தில், மேல்முறையீடு செய்ய சட்டப்படி அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், தண்டனையை நிறைவேற்றுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் நடிகர் விமல், தக் லைஃப் பதிலுக்கு என்று தனி ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு வழக்குகளையும் எதிர்கொண்டு வருகிறார். அந்த வரிசையில் தற்போது ரூ.4.5 கோடி மதிப்பிலான காசோலை தொடர்பான வழக்கில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

Advertisement

விமல் தயாரித்து நடித்த 'மன்னர் வகையறா' திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகளுக்காக நிதி நிறுவனம் ஒன்றிடம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அந்த கடனை திருப்பிச் செலுத்துவதற்காக ரூ.4.5 கோடி மதிப்பிலான காசோலையை அவர் வழங்கியிருந்ததாக புகார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த காசோலை வங்கியில் செலுத்தப்பட்டபோது, கணக்கில் போதுமான தொகை இல்லாத காரணத்தால் அது திரும்பி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனம் காசோலை மோசடி சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தை அணுகியது.

இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்தது. இருதரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், நடிகர் விமல் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்து அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதனுடன், புகார் அளித்த தரப்புக்கு உரிய இழப்பீட்டுத் தொகையையும் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

சிறை தண்டனை நிறைவேற்றப்படுமா?: எனினும், நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விமல் தரப்புக்கு சட்டப்படி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனால், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையினை நிறைவேற்ற தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை அணுகுவதற்கான வாய்ப்பு விமலுக்கு கிடைத்துள்ளது. அங்கு என்ன தீர்ப்பு வெளியாகிறது என்பதைப் பொறுத்தே இந்த வழக்கின் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் அமையும்.

சினிமா வட்டாரத்தில் பரபரப்பு: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விமலுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், மேல்முறையீட்டில் என்ன முடிவு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதற்கிடையில், இந்த தீர்ப்பு தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், விமல் தரப்பின் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தற்போது பலரும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.