சென்னை: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் e நடத்தி வருகின்றனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக் கோரி முன்னணி நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரடியாக அறிக்கை வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்காகவும் நாட்டின் எதிர்காலத்திற்காகவும் நான் உறுதியுடன் நிற்கிறேன் என்ற அவரது பதிவு காட்டுத்தீயாக பரவி வருகிறது.

Advertisement

ஜோதிகாவின் ஆவேசப் பதிவு: நீட் தேர்வில் நடந்துள்ள அநீதிக்கு எதிராகத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஜோதிகா குரல் கொடுத்துள்ளார். அதில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நாட்டின் எதிர்காலமான மாணவர்களுக்காகவும், ஜனநாயகம் மற்றும் சீர்திருத்தப்பட்ட கல்வி முறைக்காகவும் நான் துணை நிற்கிறேன். போராடும் Gen Z தலைமுறையினரை எண்ணி ஒரு தாயாகப் பெருமைப்படுகிறேன். 'நாம் தான் இந்தியா' என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். பயத்தை உடைத்து எறிந்ததற்கு நன்றி, 'ஜெய் ஹிந்த்' என பதிவிட்டுள்ளார்.

Advertisement

Photo Credit:

டெல்லி ஜந்தர் மந்தர் தடியடி: மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி, கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடந்தது. சோனம் வாங்சுக் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் இளைஞர்கள் பிரம்மாண்ட பேரணி நடத்த முயன்றனர். அப்போது பேரணியைக் கலைக்கப் போலீஸார் நடத்திய கொடூரத் தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டு தாக்குதலில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர். மாணவர்களுக்கு ஆதரவாகப் பிரதமரின் இல்லத்தை எதிர்க்கட்சி கட்சிகள் முற்றுகையிட்டன

Advertisement

திரண்ட பிரபலங்கள்: டெல்லியைத் தொடர்ந்து, சென்னையிலும் நீட் எதிர்ப்புப் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. சென்னை தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் CJP மாணவர்கள் சங்கம் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'நீலம் பண்பாட்டு மையம்' போராட்டம் நடத்தியது. இதில், பிரபல இயக்குநர்கள் அமீர், வெற்றி மாறன், பா.ரஞ்சித் மற்றும் நடிகைகள் ரேவதி, ஆண்ட்ரியா, தேவதர்ஷினி என பலர் நேரில் கலந்துகொண்டனர்.