சென்னை: யோகிபாபு கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். காமெடி ஆக்டராக மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் மறுபக்கம் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. ஒரு வருடத்தில் எக்கச்சக்க படங்களில் நடித்துவரும் அவர்; தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியாக இருக்கிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் அர்ஜுனன் பேர் பத்து படம் வரவிருக்கிறது.

Advertisement

சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு வெள்ளித்திரைக்குள் வந்தவர் யோகிபாபு. வித்தியாசமான ஹேர் ஸ்டைல், திறமையான நடிப்பு காரணமாக ரசிகர்களை தனக்கென சேர்த்துக்கொண்டார். அதுமட்டுமின்றி வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோர் காமெடி ட்ராக்கிலிருந்து ஒதுங்க; அந்த வெற்றிடத்தை சரியாக பயன்படுத்தி; படத்துக்கு படம் தன்னுடைய காமெடியில் வெரைட்டி காட்டி வளர்ந்தார்.

Advertisement

Photo Credit:

கதையின் நாயகனான யோகிபாபு: தொடர்ந்து காமெடி கேரக்டரில் நடித்துவந்த அவர்; நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். ஹீரோயினாக நயன்தாரா நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அப்படத்துக்கு பிறகு மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடித்த மண்டேலா படமும் ஹிட்டாகி தேசிய விருது வென்றது. வரிசையாக ஹிட்டானதால் தொடர்ந்து லீடு ரோலில் நடித்தாலும் அந்த இரண்டு படங்கள் மாதிரி வெற்றியை மற்ற படங்கள் கொடுக்கவில்லை.

Advertisement

விட்டுக்கொடுக்காத யோகிபாபு: ஒருபக்கம் கதையின் நாயகனாக நடித்தாலும் மறுபக்கம் காமெடி ரோலையும் செய்துவருகிறார். அப்படி அவர் ஜெயிலர், மாவீரன், குட் பேட் அக்லி, டூரிஸ்ட் ஃபேமிலி, தலைவன் தலைவி உள்ளிட்ட படங்களில் காமெடி ரோல் மட்டுமின்றி கேரக்டர் ரோலையும் ஏற்றார். மேலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியான ஆர்ட்டிஸ்ட்டாக இருக்கிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் அர்ஜுனன் பேர் பத்து திரைப்படம் வரவிருக்கிறது.

யோகிபாபு பேச்சு: அந்தப் படத்தின் நிகழ்ச்சியில் பேசிய அவர், "நயன்தாராவுடன் 2016ஆம் ஆண்டே நடித்துவிட்டேன். எந்த ஹீரோயின் நடிக்கிறார் என்பது முக்கியமில்லை. எனக்கு எப்போதும் கதை மட்டும்தான் முக்கியம். மக்கள் என்னிடம் எதிர்பார்ப்பது காமெடியைத்தான். அதுதான் எனக்கு சோறு போட்டது. அதனால் வாழ்நாள் முழுவதும் நான் காமெடியை பெருமையோடு செய்துகொண்டிருப்பேன்.

Advertisement

கமலோடு நடிக்கவில்லை: இதுவரை நான் 300 படங்களில் நடித்துவிட்டேன். ஆனால் கமல்ஹாசனுடன் மட்டும் இன்னும் நடிக்க முடியாமல் இருக்கிறது. சீக்கிரமே அந்த வாய்ப்பும் கிடைக்கும் என்று நம்புகிறேன். நல்ல கதை இருந்தால் புதிய இயக்குநர்கள், உதவி இயக்குநர்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருக்கிறேன்" என்றார்.