சென்னை: மலையாள நடிகரான தியான் சீனிவாசன் சில நாட்களுக்கு முன்பு ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது; நடிகரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய்யையும், நடிகை திரிஷாவையும் கலாய்த்து பேசியிருந்தார். அந்தப் பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய சூழலில்; அவரது லைஃப் ஸ்டைல் பற்றிய விஷயம் ஒன்றை அவர் ஷேர் செய்திருக்கிறார். அது பலருக்கும் இன்ஸ்பையரிங்காக மாறியிருக்கிறது.

Advertisement

மலையாள திரையுலகத்தை சேர்ந்த தியான்தான் கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் ஹட் டாபிக். மலையாளத்தின் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவரன சீனிவாசனின் மகன். அவர் சில நாட்களுக்கு முன்பு விசிட்டர்ஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசினார் தியான். அப்போது அவர், "தமிழ்நாட்டில் விஜய் முதலமைச்சராகிவிட்டார். அவர் அப்படி ஆன பிறகு என் நண்பர் அஜி என்னிடம், இன்னும் 15 வருடங்களில் உன்னை கேரள முதலமைச்சராக்குகிறேன் என சொன்னார்.

Advertisement

Photo Credit:

மறைமுக கலாய்: அதற்கு மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் தலைவராக வேண்டும். பின்பு 15 வருடங்கள் சாரிட்டி செய்து மக்களை ஏமாற்ற வேண்டும். விஜய் செய்தது போல. மேலும், நான் முதலமைச்சராக பதவியேற்கும் நாளில் நடிகை நவ்யா நாயர் பட்டுப்புடவை அணிந்துகொண்டு முதல் வரிசையில் அமர்ந்து என்னை பார்த்து கண் கலங்க வேண்டும்" என பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சு விஜய்யையும், திரிஷாவையும் மறைமுகமாக கலாய்ப்பது மாதிரி அமைந்துவிட்டது.

Advertisement

கடுப்பில் ரசிகர்கள்: விஜய்க்கு ஒன்று என்றால் எந்த எல்லைக்கும் செல்லும் விர்ச்சுவல் வாரியர்ஸ்; இந்த விஷயத்தை சீரியஸாக கையில் எடுத்தார்கள். ஆள் ஆளுக்கு தியானை கழுவி ஊற்றினார். சிலரோ எல்லை மீறி சென்று அவர் உயிரிழந்துவிட்டதாக சொல்லி RIP எல்லாம் போட்டார்கள். சூழல் இப்படி இருக்க, அவரது இன்னொரு பேச்சும் ரசிகர்களிடையே பயங்கர வைரலாகியிருக்கிறது.

தியான் பேச்சு: அவர் பேசுகையில், " நான் பள்ளி படித்த வயதில்; படித்த என்று சொல்ல முடியாது; ஏன் என்றால் நான் படிக்கவில்லை. சும்மா போய் வந்த வயது என்று சொல்கிறேன். அந்த காலங்களில் எங்க அப்பாவும், அவரது நண்பர்களும் வீட்டில் சந்திப்பார்கள். அப்போது என் அப்பா கொஞ்சம் ட்ரிங்ஸ் சாப்பிடுவார். அப்போது என்னை அவரது நண்பர்கள் முன்னிலையில் அழைத்து வைத்து குறை சொல்வார். அதை நான் தவறு சொல்லமாட்டேன். அது எனக்கு வேண்டும்தான். ஏனெனில் அப்படித்தான் நானும் இருந்தேன்.

Advertisement

நண்பர் சொன்னது: அப்படி ஒருநாள் என் அப்பாவின் நண்பர் ஒருவர் என்னை அழைத்து, 'தியான் நீ வளர்ந்து பெரிய ஆள் ஆன பிறகு நான் சொல்வதை மனதில் வைத்துக்கொள் மொத்தம் மூன்று வங்கி கணக்குகள் தொடங்கு. உனக்கு 1000 ரூபாய் வருமானம் வருகிறது என்றால்; ஒரு கணக்கில் 600 ரூபாயும், இன்னொரு கணக்கில் 300 ரூபாயும், மூன்றாவது கணக்கில் நூறு ரூபாயும் போட்டு வை. முதல் கணக்கில் இருப்பது உனக்கானது. உன் செலவுகளை அதிலிருந்துதான் செய்ய வேண்டும். அதாவது வீடு, கார் போன்றவை வாங்குவதற்கு. அப்பா, அம்மா உள்ளிட்டோருக்கும் அதிலிருந்துதான் செலவு செய்ய வேண்டும்.

Advertisement

அந்த கணக்கு அதற்காக: இரண்டாவது கணக்கு நீ ஒரு பொறுப்புள்ள குடிமகனாக வரிகள் போன்ற விஷயங்களை செலுத்த பயன்படுத்த வேண்டும். அது உனது கடமை. தவறாமல் செய்ய வேண்டும். மூன்றாவது கணக்குதான் உனக்கு சந்தோஷத்தை கொடுக்கப்போகும் கணக்கு. கார், பங்களா உள்ளிட்டவைகளை வாங்கும்போது இருக்கும் சந்தோஷத்தைவிட இதில் அதிகம் இருக்கும். உதவி செய்வதற்காக மாதா மாதம் 100 ரூபாய் இதில் போடு. அடுத்தவர்களுக்கு நீ செய்யும் உதவிதான் உனக்கு நிறையக் சந்தோஷத்தை கொடுக்கும் என கூறினார். அப்படித்தான் இருக்கிறேன்" என்றார்.