எதுவும் பேசவில்லை, அஜித் என்னை இறுக கட்டிப்பிடித்துக்கொண்டார்: இமான்


சென்னை: அஜித் தன்னை கட்டித் தழுவிக் கொண்டதாக டி.இமான் தெரிவித்துள்ளார்.

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இத்திரைப்படத்தில் அஜித் இரண்டு கெட்டப்களில் நடிக்கிறார் என்பது தெரிந்த விஷயம். கிராமத்து அஜித், நகர்புற அஜித் என இருவருக்கும் பிஜிஎம் தயார் செய்வது கடினமாக இருந்தது என இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார்.

இரண்டு அஜித்களுக்குமான ஓபனிங் பாடல் ட்யூன் போட்டு பாடல் பதிவை முடித்து விட்டாராம். அந்த இரண்டு பாடல்களையும் கேட்ட அஜித், இமானை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரசொல்லிவிட்டு எந்த வார்த்தையும் பேசாமல் சில நிமிடங்கள் இறுக கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அஜித்தின் இந்த பாராட்டைக் கண்டு உச்சிக்குளிர்ந்த இமான் டபுள் சந்தோஷத்தோடு பணியாற்றி வருகிறார். விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித் மதுரை பாஷை பேசி நடிக்கிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தாயாரிக்கும் இப்படத்திற்கு, வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். இதில் ரோபோ சங்கர், கோவை சரளா, தம்பி ராமையா, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர். பொங்கலுக்கு இப்படம் ரீலீஸ் ஆக உள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Ajith has appreciated D.Imman for his awesome tune for his upcoming movie Viswasam.