ஒரு நடிகராக இருந்து கொண்டு மனைவியை பார்த்து இப்படி சொல்லலாமா அக்ஷய்?


மும்பை: நடிகர் அக்ஷய் குமார் தனது மனைவி இரண்டு விஷயங்களை செய்ய தடை விதித்துள்ளாராம்.

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மறைந்த இந்தி சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னாவின் மூத்த மகள் ட்விங்கிளை தான் திருமணம் செய்துள்ளார். ட்விங்கிள் படங்களில் நடிப்பதை நிறுத்துவிட்டு எழுத்தாளர் ஆகிவிட்டார்.

புத்தகங்கள் எழுதி வெளியிட்டு வருகிறார். பிரபல ஆங்கில நாளிதழிலும் கட்டுரை எழுதுகிறார்.

ட்விங்கிள்

நேரம் கிடைக்கும் போது எல்லாம் அக்ஷய் தனது மனைவியை கலாய்ப்பார், பதிலுக்கு அவரும் கலாய்ப்பார். டிவி நிகழ்ச்சிகளிலும் கணவனும், மனைவியும் சேர்ந்து கலந்து கொண்டால் இதே கூத்து தான். இந்நிலையில் தான் அக்ஷய் குமார் தான் இரண்டு விஷயங்களை செய்ய தடை விதித்திருப்பதாக ட்விங்கிள் கன்னா தெரிவித்துள்ளார்.

ஆசை

ஸ்டாண்ட் அப் காமெடி செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு. கண்ணாடி முன்னாடி நின்று பயிற்சி எடுத்து வருகிறேன். ஆனால் என் கணவர் அக்ஷய் குமாரோ ஸ்டாண்ட் அப் காமெடி எல்லாம் செய்யவே கூடாது என்று கறாராக கூறிவிட்டார் என்று ட்விங்கிள் தெரிவித்துள்ளார். (இது நியாயமா அக்ஷய் குமார்?)

படங்கள்

ஸ்டாண்ட் அப் காமெடி மட்டும் அல்ல மீண்டும் படங்களில் நடிக்க வேண்டாம் என்றும் கூறிவிட்டார் அக்ஷய். நான் அந்த இரண்டு விஷயங்களிலுமே மோசம் என்பதால் வேண்டாம் என்கிறார். நான் எப்பொழுதுமே ஜாலியாக தான் பேசுவேன். என் பேச்சை கேட்டு மக்கள் சிரிப்பார்கள். மக்களை சிரிக்க வைக்கும் விஷயங்களை சொல்வது அவ்வளவு கடினம் அல்ல. ஏன் என்றால் நான் உண்மையை தானே சொல்கிறேன் என்று ட்விங்கிள் கூறியுள்ளார்.

சிரிப்பு

ஒரு நாள் காமெடியாக பேச என்னிடம் எதுவுமே இல்லாமல் போகலாம். ஆனால் தற்போது நன்றாக சென்று கொண்டிருக்கிறது. ஒரு புத்தகத்தை எழுதி முடித்த அன்றே அடுத்த புத்தகத்திற்கான வேலையை துவங்கிவிடுவேன். என்னால் சும்மா இருக்க முடியாது. சும்மா இருந்தால் என்ன செய்வது என்றே தெரியாது என்கிறார் ட்விங்கிள்.

Have a great day!
Read more...

English Summary

Bollywood actor Akshay Kumar's wife Twinkle said that her husband has asked her not to do two things, one is stand-up comedy and another is acting.