சென்னை: பாடகி ஜானகி அம்மாவின் மறைவு மொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது உடலுக்கு கர்நாடக அரசு முழு அரசு மரியாதை வழங்கி கௌரவித்தது. இவரது மறைவு தொடர்பாக ஏற்கனவே இசைஞானி இளையராஜா தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார். அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வந்தது. இந்நிலையில் வெளிநாட்டில் தனது இசைக் கச்சேரியை முடித்துவிட்டு சென்னை வந்தரை, சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் ஜானகி அம்மா குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவரோ, " பெரும் இழப்பு.. பெரும் இழப்பு.. அவர் போல பாட இந்தியாவிலேயே ஆள் இல்லை" என்று மிகவும் தழுதழுத்த குரலில் தெரிவித்தார்.
இசைஞானி இளையராஜாவின் இசை வாழ்க்கை தொடங்கும் போது அதாவது அன்னக்கிளி படத்தில் இடம்பெற்ற பாடல்களை பாடியவர் ஜானகி அம்மா. அவரது மறைவு இசைஞானி இளையராஜாவுக்கு தனது குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்ற துயரத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். திரை இசையில் இசைஞானி இளையராஜா, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். ஜானகி என இவர்கள் கூட்டணியில் உருவாகும் பாடல்களுக்கு என்றுமே தனி வரவேற்பு கிடைத்தது. இன்றைக்கும் இவர்கள் கூட்டணியில் உருவான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.More Articles