சென்னை: பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் அன்பே டயானா. அவரே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். கடந்த 17ஆம் தேதி ரிலீஸான அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. கதை திருட்டி பிரச்னையிலும் சிக்கி; பிறகு இயக்குநர் மீது எந்த தவறும் இல்லை என்பது உறுதியானது. இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஜமா படத்தை இயக்கி முதல் படத்திலேய கவனம் ஈர்த்தவர் பாரி இளவழகன். அவரே அப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். நடிப்பிலும், இயக்கத்திலும் முத்திரை பதித்த அவர்; இப்போது இயக்கியிருக்கும் திரைப்படம் அன்பே டயானா. இதில் அவருடன் ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளிட்ட படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் யுவராஜ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
என்ன கதை?: கதை என்று எடுத்துக்கொண்டால் ரொம்பவே சிம்ப்பிளான ஒன்றுதான். பெரம்பூரில் வசிக்கும் தெலுங்கு பேசும் குடும்பத்தை சேர்ந்த ஒரு பையன்; ஆங்கிலோ இந்தியன் பெண்ணை காதலிப்பதும்; அதற்கு பிறகு நடக்கும் விஷயங்களும்தான் கதை. சிம்ப்பிளான ஒன்லைனை; பாரி தனது மேக்கிங்கால் சுவாரஸ்யத்துடன் திரைக்கதையில் கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரசிகர்களுக்கும் படம் ரொம்பவே கனெக்ட் ஆகிவிட்டது. இதனால் அவர்களும் படத்தை கொண்டாட தவறவில்லை.
குவியும் பாராட்டு: மேலும் பாரி இளவழகன் உள்ளிட்டோருக்கு வாழ்த்தும் குவிந்துவருகிறது. அதாவது, சிம்ப்பிளான லைனை இவ்வளவு எதார்த்தமாக காண்பித்ததற்கும்; பெரம்பூரை படத்தின் முக்கிய அச்சாக வைத்ததற்கும் ரசிகர்களிடம் சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. ஜமாவில் இப்படித்தான் திருவண்ணாமலை பகுதி சுற்றுவட்டார வாழ்வியலை அவ்வளவு இயல்பாக காட்டியிருந்தார். அதேபோல் இதிலும் கலக்கிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
கதை திருட்டு பிரச்னை: இதற்கிடையே இப்படம் ரிலீஸுக்கு பிறகு கதை திருட்டு சர்ச்சையிலும் சிக்கியது. அதாவது, எழுத்தாளர் கரண் கார்க்கி எழுதிய சட்டைக்காரி நாவலிலிருந்து இந்தக் கதை எடுக்கப்பட்டிருப்பதாக ஒருவர் கிளப்பிவிட; கரணும் நேற்று முன்தினம் படத்தை பார்த்தார். ஆனால் இதற்கும், தன்னுடைய நாவலுக்கும் தொடர்பில்லை என்பது உணர்ந்து வீடியோ வெளியிட்டிருந்தார். ஆனால் பாரியும், யுவராஜும் அடிப்படை முகாந்திரமே இல்லாமல் எப்படி எங்கள் மீது குற்றச்சாட்டை வைக்கலாம்; மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்று கொந்தளித்தார்கள்.
வசூல் நிலவரம்: இப்படி அன்பே டயானாவை சுற்றி சில விஷயங்கள் பாசிட்டிவ்வாகவும், நெகட்டிவ்வாகவும் நடக்கும் நிலையில் அதன் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி ஐந்தாவது நாளான நேற்று வெறும் 36 லட்சம் மட்டுமே வசூலித்திருப்பதாக Sacnilk இணையதளம் தெரிவித்திருக்கிறது. நான்காவது நாளில் 43 லட்சம் ரூபாய் வசூலித்திருந்தது. ஆக, நேற்று முன்தினத்தைவிடவும் நேற்றைய வசூல் ஏழு லட்சம் ரூபாய் குறைந்திருப்பதாக தெரிகிறது. ஐந்து நாட்களில் மொத்தம் இதுவரை படமானது இரண்டு கோடியே 79 லட்சம் ரூபாயை வசூலித்திருப்பதாக அந்த இணையதளம் கூறியிருக்கிறது.
More Articles
- லீக்கானாலும் விஜய்யோட மாஸ் குறையல.. இதுவரை ஜன நாயகன் ப்ரீ புக்கிங்கில் இத்தனை கோடியாம்!
- லீக்கானதால் பெரும் நஷ்டத்தை சந்திக்கப் போகிறதா ஜன நாயகன்?.. அட்வான்ஸ் புக்கிங்கில் பலத்த அடி!
- The Odyssey Day 2 Box Office: சொல்லி அடிக்கும் நோலன்.. அள்ளிக் கொடுக்கும் இந்தியா.. தி ஒடிஸி வசூல் விவரம்
- Anbe Diana Day 2 Box Office: கோடிகளில் வசூலைத் தொடங்கிய அன்பே டயானா.. 2வது நாள் வசூல் விவரம் இதோ!
- 100 கோடி ஓபனிங்.. ஹாட்ரிக் அடிப்பாரா விஜய்.. லியோ, கோட் வசூல் சாதனையை முறியடிக்குமா ஜன நாயகன்?
- The Odyssey Box Office: இந்திய படங்களை முதல் நாளிலேயே ஓடவிட்ட ஒடிஸி.. நோலனின் பிரம்மாண்ட வசூல் வேட்டை!