சென்னை: பாரி இளவழகன் எழுதி இயக்கி நடித்துள்ள படம் அன்பே டயானா. படத்தில் பாரி இளவழகனுடன் ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி என பலரும் நடித்துள்ளனர். படத்தை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் கடந்த 17ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் படத்தின் முதல் இரண்டு நாள் வசூல் குறித்து காணலாம்.
இயக்குநர் பாரி இளவழகன் எழுதி இயக்கி நடித்துள்ள இரண்டாவது படம் தான் அன்பே டயானா. இதற்கு முன்னர் அவர் எழுதி, இயக்கி, நடித்த படம் ஜமா. அந்த படத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாராட்டுகளைப் பெற்றது. ஆனாலும் அந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் தனக்கு கமர்ஷியலாகவும் படம் எடுக்கத் தெரியும் என்று திரை உலகத்திற்கும் ரசிகர்களுக்கும் காட்ட வேண்டும் என்பது போல ஒரு தரமான கமர்ஷியல் படமாக அன்பே டயானா படத்தை எழுதி, இயக்கி, நடித்துள்ளார் பாரி இளவழகன். இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் தொடங்கி விமர்சகர்கள் வரை பலரும் படத்தை பாராட்டி வருகிறார்கள். அதுவும் படத்தின் முதல் பாதி இந்த அளவுக்கு இருக்கிறது. இரண்டாவது பாதி அந்த அளவுக்கு இருக்கிறது என்று பாராட்டித் தள்ளுகிறார்கள். இதனால் மொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வசூல் கணக்கு: படத்திற்கு முதல் நாள் இந்தியாவில் சுமார் 30 லட்சங்கள் மட்டுமே தியேட்டரிக்கல் வசூலாக அமைந்தது. படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் வந்ததால், படம் இரண்டாவது நாளில் மட்டும் இந்தியாவில் 83 லட்சங்கள் வசூலித்துள்ளது என்று சாக் நிக் வலைதளம் தெரிவித்துள்ளது. மொத்தத்தில் இரண்டு நாட்களில் ரூபாய் 1.13 கோடிகள் வசூலித்துள்ளது. வெளிநாட்டு வசூல் கணக்கைச் சேர்த்தால் இதைவிட கூடுதலாக வரும். படத்திற்கு என்னதான் பாராட்டுக்கள் கிடைத்தாலும், பல மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள் மட்டுமே திரையிடப்படுகிறது என்பதும் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
நம்பிக்கை: வார இறுதியான இன்று மற்றும் வார நாட்களில் வரும் 22ஆம் தேதி வரை மட்டும் தான் இந்த படத்திற்கான வசூல் என்பது தியேட்டரிக்கலாக இருக்கும், அதன் பின்னர் எந்த அளவுக்கு இருக்கும் என்பது கேள்விக்குறிதான். 23ஆம் தேதி முதலமைச்சர் விஜய் நடித்த ஜன நாயகன் படம் வெளியாவதால், தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் ஜன நாயகன் படம் தான் திரையிடப்படும்.
ஆனாலும் படக்குழுவினருக்கும் இந்திய அளவிலான வசூல், வெளிநாட்டு அளவிலான வசூல் என இரண்டும் சேர்த்து ஓரளவுக்கு கை கொடுக்கும் என்று நம்புகிறது. இது மட்டும் இல்லாமல், படத்திற்கு ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More Articles
- 100 கோடி ஓபனிங்.. ஹாட்ரிக் அடிப்பாரா விஜய்.. லியோ, கோட் வசூல் சாதனையை முறியடிக்குமா ஜன நாயகன்?
- The Odyssey Box Office: இந்திய படங்களை முதல் நாளிலேயே ஓடவிட்ட ஒடிஸி.. நோலனின் பிரம்மாண்ட வசூல் வேட்டை!
- Anbe Diana Box Office: முதல் நாளில் செல்ஃப் எடுக்காத அன்பே டயானா.. இத்தனை பிரச்னைகளா?
- The Odessy Day 1 Prediction: உலகமே எதிர்பார்த்த தி ஓடிஸி.. நோலனின் கெரியரிலேயே இல்லாத வசூலா அமையுமா?
- கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’.. இந்தியாவில் மட்டும் அட்வான்ஸ் புக்கிங்கில் இத்தனை கோடியா?
- Idhayam Murali Day 5 Box Office: 5வது நாளில் தேறியதா? தடுமாறியதா? அதர்வாவின் இதயம் முரளி வசூல்!