சென்னை: அருள்நிதி ஹீரோவாக நடித்து கணேஷ் விநாயக் இயக்கியிருக்கும் திரைப்படம் அருள்வான். இதில் அவருடன் ஆரவ், ரம்யா பாண்டியன் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். பெண் கல்வியை உணர்த்தும் வகையில் கதை அமைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக ஓரளவுக்கு கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அந்தப் படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
செல்வாக்கு மிக்க குடும்பத்திலிருந்து நடிக்க வந்தவர் அருள்நிதி. பாண்டிராஜ் இயக்கிய வம்சம் படத்தில் அறிமுகமான அவர்; முதல் படத்திலேயே தன்னுடைய நல்ல நடிப்பை வெளிப்படுத்தினார். அந்தப் படத்துக்கு பிறகு மௌனகுரு, தகராறு, டிமான்ட்டி காலனி, டிமான்ட்டி காலனி 2 என பல படங்களில் நடித்தார். அந்தப் படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும்; விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக, அருள்நிதி தேர்ந்தெடுக்கும் கதைகள் ஒவ்வொரு படத்துக்கும் வேறுபட்டு இருந்ததும் பாராட்டை பெற்றுக்கொடுத்தது.
அருள்நிதியின் அருள்வான்: இப்போது அவர் அருள்வான் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதனை கணேஷ் விநாயக் இயக்கியிருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அருள்நிதியுடன் ரம்யா பாண்டியன், பிக்பாஸ் புகழ் ஆரவ் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். ரிலீஸுக்கு முன்பே இந்தப் படம் பற்றி நல்ல பேச்சுக்கள்தான் இன்டஸ்ட்ரியில் கேட்டன. எனவே இப்படத்தின் மீது பலருக்கும் ஓரளவுக்கு எதிர்பார்ப்பு இருந்ததும் உண்மை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எதிர்பார்ப்புடன் நேற்று முன்தினம் படம் ரிலீஸானது.
எப்படி இருக்கு படம்?: ரசிகர்களும் ஆர்வத்தோடு படம் பார்க்க சென்றார்கள். அவர்களை படம் ஏமாற்றவில்லை என்றே தெரிகிறது. பழங்குடியின மக்களுக்கும், பெண்களுக்கும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கதையையும், திரைக்கதையையும் எழுதியிருந்தார் இயக்குநர். ஆழமான கருத்தை பிரசார தொனியில்லாமல் கொடுத்தது பெரும்பாலானோரை கவர்ந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். எனவே படத்துக்கு வரவேற்பும் கிடைக்க தொடங்கியது.
அருள்நிதிக்கு பாராட்டு: முக்கியமாக அருள்நிதியை பாராட்டி தள்ளிவிட்டார்கள். இந்த மாதிரியான ஒரு கதையில் நடிக்க ஒத்துக்கொண்டதற்காகவே அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்; அருள்நிதி மாதிரியான நடிகர்கள்தான் இந்த மாதிரி விஷயங்களை முன்னெடுக்கிறார்கள்; தொடர்ந்து இதுமாதிரி படங்களை அவர் செய்ய வேண்டும் எனவும் வாழ்த்துகளை குவித்து வருகிறார்கள். இப்படி விமர்சன ரீதியாக படத்துக்கு ஆதரவு பெருகிய நிலையில்; படத்தின் வசூல் குறித்த தகவலை வெளியிட்டிருக்கிறது Sacnilk இணையதளம்.
படத்தின் வசூல் எவ்வளவு?: அதன்படி, படம் ரிலீஸாகி இரண்டாவது நாளான நேற்று வெறும் 18 லட்சம் ரூபாய் மட்டும்தான் வசூலித்ததாம்.முதல் நாளில் அந்தப் படம் 39 லட்சம் ரூபாயை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று வசூல் பலமாக அடி வாங்கியிருக்கிறது. இரண்டு நாட்களில் மொத்தம் அந்தப் படம் 67 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாக அந்த இணையதளம் கூறுகிறது.ஒடிசி, அன்பே டயானா படங்களுக்கு கூட்டம் செல்வதால் இன்னும் அருள்வான் படத்துக்கான வசூல் பிக்கப் ஆகவில்லை என்றே கருதப்படுகிறது. அதேசமயம் படம் நன்றாக இருப்பதால் இனி வரும் நாட்களில் கண்டிப்பாக வசூல் அதிகமாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
More Articles
- Arulvaan Review: அருள்வான் விமர்சனம்.. மலையை விட உயர்ந்தது கல்வி.. அருள்நிதி படம் எப்படி இருக்கு?
- எதிர்பாராத மிரட்டல் எதிர்நோக்கி வருது.. ‘டிமாண்டி காலனி3’ திரைப்படம் ஷூட் ஓவர்.. ரிலீஸ் எப்போ?
- தீபாவளிக்கு டைரக்ட் ஓடிடி ரிலீஸ்.. அருள்நிதியின் ராம்போ படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் தெரியுமா?
- Demonte colony 3 movie: அடுத்த பாகத்துக்கு தயாராகும் டிமான்டி காலனி.. மீண்டும் இணையும் கூட்டணி!
- ஓடிடியில் வெளியானது "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம்!
- மீண்டும் கைக்கொடுத்த ஹாரர் திரில்லர் படம்.. டிமான்டி காலனி 2 படத்தின் சக்சசை கொண்டாடிய டீம்!