சதுரங்க வேட்டை 2.. ரூ. 1.79 கோடி சம்பள பாக்கி கேட்டு அரவிந்த்சாமி வழக்கு.. மனோபாலாவுக்கு நோட்டீஸ்!


சென்னை: சதுரங்க வேட்டை 2 பட சம்பளப் பாக்கியைப் பெற்றுத் தரக்கோரி நடிகர் அரவிந்த்சாமி தொடர்ந்த வழக்கில் அப்படத் தயாரிப்பாளரான நடிகர் மனோபாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடிகரும் இயக்குனருமான மனோபாலா தயாரிப்பில் 2014-ஆம் ஆண்டு வெளியான படம் சதுரங்க வேட்டை'. நூதன முறையில் மக்களை ஏமாற்றுவது தான் இப்படத்தின் கதை. நட்டி நாயகனாக நடித்திருந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இதனால், அப்படத்தின் 2-ம் பாகமான சதுரங்க வேட்டை-2 படத்தை மனோபாலாவே தயாரிக்க முடிவு செய்தார். இப்படத்தில் நாயகனாக அரவிந்த்சாமியும், அவருக்கு ஜோடியாக திரிஷாவும் நடித்துள்ளனர்.

சம்பள பாக்கி:

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் மற்ற வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தில் நடித்ததற்கான சம்பளத்தை அரவிந்த்சாமிக்கு தயாரிப்பாளர் மனோபாலா தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பட டப்பிங்கிற்கு அரவிந்த்சாமி செல்லாமல் இழுத்தடித்து வருவதாகத் தெரிகிறது.

விசாரணை:

இந்த சூழ்நிலையில், அரவிந்த்சாமி தனது சம்பள பாக்கியான 1.79 கோடியை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் மனோ பாலா மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.

விளக்கம்:

வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர், அரவிந்தசாமி தரப்பிடம் பட வெளியீட்டுக்கு தடை கேட்காத பட்சத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அரவிந்த்சாமி தரப்பில் பட வெளியீட்டை தடுப்பது எங்களது நோக்கம் அல்ல என்றும் சம்பள பாக்கி வந்துசேர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தள்ளி வைப்பு:

அரவிந்த்சாமி தரப்பு வாதத்தை கேட்ட நீதிமன்றம், வழக்கை செப்டம்பர் 20-ந் தேதிக்கு தள்ளி வைத்தது. அன்று மனோபாலா தரப்பு அளிக்கும் பதிலை வைத்து அரவிந்த்சாமிக்கு சம்பள பாக்கி கிடைக்குமா? என்று குறித்து தெரிய வரும்.

Have a great day!
Read more...

English Summary

Arvind Swami-starrer Sathuranga Vettai 2 has got mired in a legal battle with the actor filing a civil suit in the Madras High Court for recovery of his balance remuneration of ₹ 1.79 crore from the film’s producer M. Manobala, an acclaimed director and comedian.