கோவில்பட்டி: தமிழ் இலக்கிய உலகில் மிகவும் புகழ் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர் பூமணி. இவர் உடல்நலக்குறைவால் மறைந்தார். அவருக்கு வயது 79. எழுத்தாளர் பூமணியின் மறைவு இலக்கிய உலகைச் சார்ந்தவர்களையும் வாசகர்களையும் திரையுலகத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பூமணி எழுத்தாளராக மட்டும் இல்லாமல், கருவேலம்பூக்கள் என்ற படத்தையும் இயக்கி உள்ளார். இந்த படத்தை தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்திற்காக இயக்கி இருந்தார். இவரது வெக்கை நாவலை வெற்றி மாறன் திரைக்கதை அமைத்து, அசுரன் படமாக இயக்கினார்.
தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்த படம் தமிழ் திரையுலகில் மிகவும் முக்கியமான படங்களில் ஒன்றாக மாறியது. பூமணி எழுதிய அஞ்ஞாடி என்ற நாவல் 2014ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது. எழுத்தாளர் பூமணியின் மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரது உடலுக்கான இறுதிச் சடங்குகள் கோவில்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதாவது ஜூலை 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.
திரை உலகைச் சேர்ந்த ஜாம்பவான்கள் பலரும் அடுத்தடுத்து இறப்பது ரசிகர்கள் மட்டும் இல்லாமல் மொத்த திரை உலகத்தினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.More Articles