சென்னை: நடிகர் அதர்வா நடிப்பில், தமன் இசையமைப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'இதயம் முரளி' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் நல்லதொரு தொடக்கத்தைப் பெற்றுள்ளது.

Advertisement

அதர்வாவின் முந்தைய பிளாக்பஸ்டர் ரிலீஸான 'பராசக்தி' திரைப்படம் முதல் நாளில் இந்திய அளவில் ரூ. 14 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது 'இதயம் முரளி' படத்தின் ஓப்பனிங் சற்று குறைவாக இருந்தாலும், அதர்வாவின் முந்தைய இரண்டு படங்களான டிஎன்ஏ, தணல் ஆகியவற்றின் வசூலை விட இது பல மடங்கு அதிகம் என்பதால், இது அவருக்கு ஒரு தரமான கம்பேக் படமாக அமைந்துள்ளது.

Advertisement

Photo Credit:

இதயம் முரளி: 1991ம் ஆண்டு முரளி நடித்து வெளியான கிளாசிக் ஹிட் 'இதயம்' படம், தன் காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும் ஒரு காதலனின் வலியைப் பேசியது. ஆனால், இந்த 'இதயம் முரளி' காதலைச் சொல்லத் தவிக்கும் ஒரு காதலனுக்கு, இந்த உலகமே ஒன்று சேர்ந்து எப்படியாவது அவனது காதலைச் சேர்க்க எத்தனை வாய்ப்புகளை வழங்க முடியுமோ, அத்தனையையும் வழங்கும் ஒரு மேஜிக்கான கதைக்களம். படத்தில் சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும், ரசிகர்களின் மனதில் ஒரு அழகான, இதமான உணர்வை இப்படம் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

இரண்டாம் நாள் வசூல்: படம் ரிலீஸானதில் இருந்தே பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படத்தின் முதல் நாள் வசூலில் 1,375 தியேட்டரில் காட்சிகளின் வெளியாகி1.90 கோடியை வசூலித்தது. இரண்டாம் நாளான நேற்று ₹3.15 கோடி நிகர வசூலைப் பெற்றது. இதன் மூலம், இப்படத்தின் மொத்த வசூல் ₹5.81 கோடியாக உள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் அதர்வா, ப்ரீத்தி, காயடு ஆகியோருடன் நடட்டி, நிஹாரிகா என்எம், பரிதாபங்கள் புகழ் சுதாகர், யஷஸ்ரீ ராவ், பிரபல பாடகி ஜோனிதா காந்தி மற்றும் அஞ்சு குரியன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். தமன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா மற்றும் சி.எச். சாய் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். பிரதீப் ராகவ் படத்தொகுப்பு பணிகளைக் கவனித்துள்ளார்.