மெர்சலாக ஈர்த்த ஸ்ரேயா கோஷல் தான் நம்பர் ஒன்! #BestOfTamilCinema2017 #FilmibeatPolls


பெஸ்ட் சிங்கர் 2017

சென்னை : கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் சிறப்பான பாடல்களின் மூலம் ரசிகர்களை ஈர்த்த பாடகர்கள் யார் என நமது தளத்தின் பார்வையாளர்களிடையே ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினோம்.

ஒரு நாள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆன்லைன் கருத்துக்கணிப்பில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தங்களுக்கு விருப்பமான பாடகர்/ பாடகிக்கு வாக்களித்தனர்.

ரசிகர்களின் வாக்குகளின் அடிப்படையில் கடந்த ஆண்டின் சிறந்த பாடகியாக ஸ்ரேயா கோஷல் தேர்வு செய்யப்படுகிறார்.

சிறந்த பின்னணி பாடகர் / பாடகி

58.32% வாசகர்களின் வாக்குகளைப் பெற்று '2017-ம் ஆண்டின் சிறந்த பாடகியாக தேர்வாகி இருக்கிறார் ஸ்ரேயா கோஷல். 'போகன்' திரைப்படத்தில் 'வாராய் நீ வாராய்...' என சங்கர் மகாதேவனுடன் இணைந்து பாடி சிலிர்க்க வைத்த ஸ்ரேயா கோஷல், 'புரியாத புதிர்' படத்தின் 'மழைக்குள்ளே...' பாடலைப் பாடி ரசிகர்களை நிஜ மழையிலேயே நனைய வைத்தார்.

ஸ்ரேயா கோஷல்

'மெர்சல்' படத்தில் ஸ்ரேயா கோஷல் பாடிய 'நீதானே நீதானே' செம ஹிட் ஆல்பம் ஆனது. ரஹ்மான் இசையில் தன் குரலால் உருக்கிய ஸ்ரேயா கோஷல் ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்தார். மயக்கும் குரலுக்குச் சொந்தக்காரியான ஸ்ரேயா கோஷல் இந்த ஆண்டிலும் பல ஆல்பங்களுக்குப் பாடி ரசிகர்களை மகிழ்விக்க வாழ்த்துவோம்.

சித் ஶ்ரீராம்

'மெர்சல்' படத்தின் மாச்சோ பாடலின் மூலம் விவேக்கின் வரிகளை இளைஞர்களின் ட்ரெண்டிங் ஆந்தம் ஆக்கிய குரல் சித் ஶ்ரீராமினுடையது. அவருக்கு ரசிகர்கள் அளித்த வாக்கு சதவீதம் 13.57%. கடந்த ஆன்டை விட இந்த ஆண்டு '2.ஓ', 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'டிக் டிக் டிக்' என பல படங்களின் பாடல்களில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் சித் ஶ்ரீராம்.

ஸ்வேதா மோகன்

'ப.பாண்டி' படத்தில் இடம்பெற்ற 'பார்த்தேன் களவு போன நிலவ...', 'வெண்பனி நிலவே...' ஆகிய பாடல்களின் மூலம் ரிப்பீட் மோடில் ஒலித்துக் கொண்டிருந்தது ஸ்வேதா மோகனின் குரல். 'மாச்சோ' பாடலில் ஆங்கிலமும் தமிழும் கலந்து புது ட்ரெண்டில் பாடி அசத்திய ஸ்வேதாவுக்கு வாசகர்களின் ஆதரவு 11.65%.

சங்கர் மகாதேவன்

9.55% வாசகர்களின் வாக்குகளைப் பெற்றிருக்கிறார் சங்கர் மகாதேவன். 'போகன்' படத்தில் இடம்பெற்ற 'வாராய் நீ வாராய்' தொடங்கி 'கருப்பன்' படத்தின் 'கருவா கருவா பயலே' வரைக்கும் சங்கர் மகாதேவனின் குரலுக்கே எக்கச்சக்க ஃபேன்ஸ். தனித்துத் தெரியும் குரலில் ஏற்ற இறக்கமாய், கிறக்கமாய் பாடி அசத்தும் சங்கர் மகாதேவனுக்கு ரசிகர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ்.

சக்திஶ்ரீ கோபாலன்

கடந்த ஆண்டில் 'வேலைக்காரன்', 'அவள்' ஆகிய படங்களின் பாடல்களில் சிறப்பாக பெர்ஃபார்ம் செய்த சக்திஶ்ரீ கோபாலனுக்கு 4% வாக்குகளும், 'வனமகன்', 'சத்யா' பாடல்களின் மூலம் ரசிக்க வைத்த பென்னி தயால் 2.86% வாக்குகளும் பெற்றிருக்கிறார்கள். இந்த ஆண்டில் பாடல்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்திழுக்க அத்தனை பேரையும் வாழ்த்துவோம்.

Have a great day!
Read more...

English Summary

We conducted a survey in our site about Tamil cinema's best playback singer 2017. Thousands of readers participated in this one-day online survey and voted for their favorite singer. Shreya Ghoshal is selected as the best playback singer of 2017 based on fans votes.