சென்னை: திரைக்கதை மன்னன் பாக்யராஜ் கடந்த மாதத்தில் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அவரின் குடும்பத்தினர், அவரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றியவர்கள், அவரது ரசிகர்கள் என பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதிலும் பார்த்திபனை ரொம்பவே அப்செட் ஆக்கியது. இந்நிலையில் அவரை விமர்சனம் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

Advertisement

இயக்குநரும், திரைக்கதை மன்னனுமான பாக்யராஜ் தன்னுடைய 73வது வயதிலும் ஆரோக்கியமாகவே காட்சியளித்தார். கடந்த மாதத்தில் நடந்த குஷ்பூ மகளின் திருமணத்துக்கு கூட கோவாவுக்கு சென்றுவந்தார். ஆனால் அங்கிருந்து வந்த அடுத்த நாள் காலையில் வாக்கிங்கை முடித்த அவருக்கு; மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்து சென்றாலும்; அவர் உயிரிழந்துவிட்டார். அதனையடுத்து அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Advertisement

Photo Credit:

அடுத்தடுத்த இழப்புகள்: கடந்த மாதம் தமிழ் சினிமாவுக்கு அடுத்தடுத்து பேரதிர்ச்சிதான். ஏனெனில் பாக்யராஜ் இறந்த சில வாரங்களுக்கு முன்புதான் அவரது குருநாதர் பாரதிராஜாவும் உயிரிழந்திருந்தார். இப்படி ஒரே மாதத்தில் அதுவும் தொடர்ச்சியாக பாரதியும், பாக்யாவும் சென்றது ஒட்டுமொத்த இந்திய திரைத்துறையையும் பெரிய சோகத்தில் தள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் அப்செட்: முக்கியமாக பாக்யராஜின் மறைவு; அவரது உதவி இயக்குநராக இருந்து பின்னர் நடிகராகவும், இயக்குநராகவும் மாறிய பார்த்திபனை உச்சக்கட்ட வலியில் தள்ளியிருக்கிறது. இறுதி சடங்கு நடந்த நாளில் அத்தனை வேலைகளையும் இவரே இழுத்துப்போட்டு செய்தார். மேலும், ஒரு அட்டையையும், பேப்பரயும் முகப்பில் வைத்து அதில், 'உங்கள் கே. பாக்யராஜ்' என எழுதியும் வைத்திருந்தார் பார்த்திபன். இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்தாலும் அவரை சிலர் கடுமையாக விமர்சித்தார்கள். அதிலும் பாக்யராஜின் உதவி இயக்குநர்களில் ஒருவர் பார்த்திபனை தனிப்பட்ட முறையில் ஓவராகவே பேசியிருந்தார்.

Advertisement

பார்த்திபனின் பதிவுகள்: அதை நினைத்து பார்த்திபன் ஃபீல் செய்தார். அதேசமயம் குருநாதரை ஒவ்வொரு நாளும் நினைவுகூர்ந்தே வருகிறார். அவ்வப்போது அவரது புகைப்படத்தை இவர் சோகத்துடன் பார்த்துக்கொண்டு நிற்பது போன்ற ஃபோட்டோக்களையும் தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில் அதையெல்லாம் வைத்து பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்து பதிவிட்டிருக்கிறார். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

என்ன பதிவு?: அவர் தனது பதிவில், "இறப்பு வீடு/இரங்கல் நிகழ்வில் நாம் இயல்பாக இருக்கும்போது மற்றவர்கள் புகைபடம் எடுப்பது ஒன்று. ஆனால் ஆள் வைத்து விதவிதமான ஆங்கிளில் சோகமாக இருப்பது போன்று புகைப்படம் எடுத்துக்கொள்வது இறந்தவரை சிறுமைப்படுத்துவது. அதை பொதுவில் வெளியிடுவது அதைவிடவும் கீழான மனநிலை. இதில் இவர் எந்த ரகம்?" என கேள்வி எழுப்பியிருக்கிறார்.