சென்னை: கொளத்தூரில் கொத்து பரோட்டா என முதலமைச்சர் விஜய் கரூரில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து முதலமைச்சர் விஜய்க்கு எதிரான கண்டன பதிவுகளை வெளியிட்டு கடுமையாக விமர்சித்து வருகிறார்.

Advertisement

சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் ரஜினிகாந்த், அஜித், விஜய் படங்களை எப்போதுமே கடுமையாக விமர்சித்து வருவார். விஜய் முதலமைச்சரான நிலையில், தற்போது அரசியல் ரீதியாகவும் தனது கருத்துக்களை பதிவிட்டு வரும் ப்ளூ சட்டை மாறன் திமுக ஐடி விங் எதிர்ப்பு தெரிவிப்பதை விட ஒரு படி மேலே சென்று முதலமைச்சர் விஜய்யை விளாசி வருகிறார்.

Advertisement

சென்னையை கோட்டையாக வைத்திருந்த திமுகவிடம் இருந்து பல இடங்களை முதல் முறை தேர்தலிலேயே தவெக வென்ற நிலையில், ப்ளூ சட்டை மாறன் மிஸ்ஸான சில தொகுதிகளை மட்டும் கோடிட்டு சொல்வது எல்லாம் செம காமெடி என தவெக தொண்டர்களும் விஜய் ரசிகர்களும் கலாய்த்து வருகின்றனர்.

முதல்வர் மாதிரியா பேசுறாரு: கொளத்தூரில் ஸ்டாலின் சாருக்கு மக்கள் கொத்து பரோட்டோ போட்டு வீட்டிலேயே உட்கார வைத்து விட்டனர் என தவெக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய் கரூரில் இன்று பேசியதை பார்த்து எதிர்க்கட்சியினர் இதெல்லாம் ஒரு முதலமைச்சர் பேசுவது போலவா உள்ளது என்றும் விஜய் இன்னமும் நடிகராக சினிமாவில் பன்ச் வசனம் பேசுவதை போலவே மக்கள் மத்தியில் பேசிக் கொண்டிருக்கிறார் என்கின்றனர். ஆனால், மக்களுடன் அவர் டைரக்ட் கனெக்ட்டில் இருக்கத்தான் இப்படி பேசுகிறார் என்றும் மக்கள் சொல்லை விட செயலை அதிகம் விரும்புகின்றனர் என விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Advertisement

தூள் பக்கோடா, சேமியா பாயாசம்: "தவெகவை துறைமுகம் தொகுதியில்... தூள் பக்கோடா போட்டு, சேப்பாக்கத்தில் சேமியா பாயாசம் போட்டதே திமுக... அதை பற்றி பேச மாட்டீர்களா?

234 தொகுதிகளில்..126 தோல்வி அடைந்தீர்களே...

அங்கே மக்கள்...தவெகவிற்கு போட்டதும் கொத்து பரோட்டாதானே?" என ப்ளூ சட்டை மாறன் முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு கடுமையாக எதிர் விமர்சனம் தெரிவித்துள்ளார். அவரது ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ஆதரவு மற்றும் ட்ரோல் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. கரூரில் இன்று முதலமைச்சர் விஜய் வெற்றிகரமாக மக்களை சந்தித்து பேசிவிட்டுச் சென்ற நிலையில், பலரும் அவரது பேச்சுக் குறித்து விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.