சென்னை: தனுஷ்தான் கடந்த இரண்டு நாட்களாக அனைவரிடமும் ஹெட்லைன்ஸாக இருக்கிறார். திருவள்ளூரில் நடந்த ரத்த தான முகாமில் அவர் பேசிய விஷயங்கள்; அவரது அரசியல் பிரவேசம் நடைபெறுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கடுமையாக ட்ரோல் செய்திருக்கிறார்.
தனுஷின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி நேற்று முன்தினம் திருவள்ளூரில் தனுஷ் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், ரத்த தான முகாமும் நடைபெற்றன. அதில் தனுஷும் கலந்துகொண்டு தன்னுடைய ரசிகர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், "ராயன், கேப்டன் மில்லர் படங்களுக்கு தேசிய விருது கொடுத்தார்கள். அந்தப் படங்களை விட தகுதியான படங்கள் வந்திருக்கின்றன. ஏன் கொடுக்கவில்லை என்று கேட்கிறார்கள். அவர்களை நான் மதிக்கிறேன்.
ஏன் கேட்கவில்லை?: ஆனால், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, 3, வடசென்னை, கர்ணன் உள்ளிட்ட படங்களுக்கு எல்லாம் தேசிய விருது கொடுக்கவில்லை. அப்போது ஏன் கொடுக்கவில்லை என்று யாரும் கேட்கவில்லை. இப்போது கேட்கிறார்கள். தட்டிவிடாதீர்கள்; தட்டிக்கொடுங்கள். அஜித் சொல்வது மாதிரி,'நீயா தோத்துட்டன்னு ஒத்துக்கும் வரைக்கும் உன்னை யாரும் தோற்கடிக்க முடியாது. இசை வெளியீட்டு விழாவிலோ, இதுபோன்ற நிகழ்வுகளிலோ சந்தித்துவிட்டு கலைவது என்று மட்டும் இருக்கக்கூடாது.
அந்தக் கூட்டம் நாம் இல்லை: இந்தக் கூட்டத்துக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்பதை உணர்த்த வேண்டும். நம்மிடம் இருக்கும் பசங்க சும்மா இணையத்தில் நெகட்டிவிட்டியையும், அவதூறையும் பரப்பும் கூட்டம் இல்லை. மேலே இருப்பவர்களை கீழே இறக்கிவிடுவது, டாக்சிக் பரப்புவது போன்ற செயல்களை செய்யும் பசங்க இல்லை. களத்தில் இறங்கி களைகட்டும் பசங்க. அன்பே பகிரும் பசங்க, அன்பே சிவம் என்ற பாதையில் போகும் பசங்க. ஓம் நமச்சிவாயா.. ஜெய்" என முடித்தார்.
அரசியல் பிரவேசம்?: தனுஷின் இந்தப் பேச்சு அவர் அரசியலுக்கு வருவாரோ என்ற கேள்வியை உருவாக்கியிருக்கிறது. மேலும் பலர் கடுமையாக கிண்டல் செய்துவருகிறார்கள். அதிலும் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், மாமனார் ரஜினியின் ஆன்மீக ஆட்சி கனவை தனுஷ் நிறைவேற்ற முயற்சிகிறார் என தாக்கியிருந்தார். இந்நிலையில் மேலும் சில ட்வீட்களில் அவரை கடுமையாக ட்ரோல் செய்திருக்கிறார்.
மகன் பற்றி கதை: அதுவும் அந்தப் பேச்சின்போது தனுஷ் தன் மகனுடன் வீடியோ கேம் விளையாண்ட கதையை பகிர்ந்திருந்தார். அதில், 'தொடர்ந்து நான் வென்றுகொண்டே இருந்தேன். சரி போதும் என எழுந்தபோது, எங்கே போகிறீர்கள் இன்னும் நான் வெல்லவில்லையே' என லிங்கா சொன்னான். அதுதான் எனக்கு இன்ஸ்பயரிங்காக இருந்தது' என்றிருந்தார். ஆனால் இதேபோன்ற ஒரு கதையை சில வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் ஒருவர் சொல்கிறார். இதனை பகிர்ந்திருக்கும் ப்ளூ சட்டை மாறன், "இன்னொருத்தர் வாழ்வில் நடந்த கதையை சுட்டு தன் வாழ்வில் நடந்தது மாதிரி உருட்டும் நடிகர்' என குறிப்பிட்டிருக்கிறார்.
தொடர்ந்து அட்டாக்: மேலும் இன்னும் சில ட்வீட்களில், "திரைப்படத்தில் நடிப்பதைவிட மேடையில் நடிப்பதற்கு தேசிய விருது தந்தால்.. சுள்ளானுக்குதான் அதிக விருதுகள் கிடைக்கும்" என்றும், மகனிடம் If You are Bad, Iam Your Dad என்று பேசிய பஞ்ச் டயலாக்கை பகிர்ந்து, இந்த மொக்கை பஞ்ச்சை மேடைல பேசறாரு. Very funny guy" என்றும் கலாய்த்திருக்கிறார். அவரது ட்வீட்டுகள் ட்ரெண்டாகியுள்ளன.
More Articles
- அவர்களின் தலைவன்னு தனுஷ் பெருமையா சொல்வார்.. அரசியல் பேச்சுக்கு சலங்கை கட்டிய சகோதரி
- என்னது தலைவர் தனுஷ்ஷா? ஆர்ப்பரிக்கும் தனுஷ் ரசிகர்கள்.. ஷாக் ஆன ரஜினி ரசிகர்கள்.. புது பஞ்சாயத்து ஸ்டார்ட்
- DHANUSH B'DAY: தனுஷ் பிறந்த நாள்.. இந்த பிறந்த நாள் தனுஷ்க்கு ஏன் ரொம்பவும் ஸ்பெஷல் தெரியுமா?
- விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரை சந்திக்கும் தனுஷ்?.. சி.எம் ஆசையில் போறாராம்.. பிரபலம் சொன்ன சீக்ரெட்
- விஜய் எடுத்த முதல் ஸ்டெப் மாதிரியே தனுஷும்.. அதே நாளில் செஞ்சுருக்காரே.. ஒருவேளை நடக்குமோ?
- Dhanush: காலில் விழுவது அடிமைத் தனம்.. தனுஷ் ரசிகர்களின் செயலால் பா. ரஞ்சித் வீடியோ வைரல்