சென்னை: பாலிவுட் படங்கள் கூட இந்தளவுக்கு துரந்தர் 2வை தொடர்ந்து பல படங்கள் முதல் நாள் வசூலை அள்ளவே கடும் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஹாலிவுட் படமான 'தி ஒடிசி' (The Odyssey) அட்வான்ஸ் புக்கிங்கிலேயே பல கோடிகளை வசூல் செய்துவிட்டதாக சூப்பரான தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

சூர்யா நடித்த கஜினி படத்தின் ஒரிஜினல் சொந்தக்காரரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஒவ்வொரு படங்களுமே ரசிகர்களின் ஃபேவரைட் படங்கள் தான். ஃபாலோயிங் படத்தின் மூலம் 1998ல் இயக்குநராக ஹாலிவுட்டில் அறிமுகமானவர் தான் கிறிஸ்டோபர் நோலன்.

Advertisement

அவர் இயக்கிய மெமன்டோ திரைப்படம் தான் தமிழ் மற்றும் இந்தியில் கஜினி படமாக உருவானது. டைட்டானிக் ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ இவர் இயக்கத்தில் நடித்த இன்செப்ஷன் படமெல்லாம் இப்போது பார்த்தாலும் மண்டையை குழப்பி விடும்.

இன்டர்ஸ்டெல்லார், டெனட் (மாநாடு படத்துக்கு இன்ஸ்பிரேஷன்), டன்கிர்க் மற்றும் ஓபன்ஹெய்மர் என இவர் இயக்கிய அத்தனை படங்களும் மாஸ்டர் பீஸ் தான். இந்நிலையில், அடுத்த பிரம்மாண்டத்தை இந்த வாரம் ஜூலை 17ம் தேதி இறக்க காத்திருக்கிறார்.

இந்தியாவில் கிறிஸ்டோபர் நோலன்: கிரேக்க அரசன் ஒடிசியஸ் ஆக ஹாலிவுட் நடிகர் மேட் டேமன் நடித்துள்ள தி ஒடிஸி படத்தை இயக்கியுள்ளார் கிறிஸ்டோபர் நோலன். ட்ராய் படத்தை போல இந்த படத்திலும் அந்த ட்ரோஜன் ஹார்ஸ் கதை உள்ளது. ஸ்பைடர்மேன் நடிகர் டாம் ஹாலண்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிறிஸ்டோபர் நோலன், மேட் டேமன், டாம் ஹாலண்ட் உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்கள் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்து படத்தின் பிரத்யேக ப்ரீமியர் ஷோவை நடத்தி புரமோஷன் செய்தனர். மேலும், மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் டீ குடித்த வீடியோவும் வைரலானது.

Advertisement

ஐமேக்ஸ் எல்லாம் ஹவுஸ்ஃபுல்: அப்செஷன் படத்தையே அப்செஷன் ஆனது போல இந்திய ரசிகர்கள் மிட் நைட் ஷோக்கள் ஹவுஸ்ஃபுல் ஆகும் அளவுக்கு பார்த்துக் கொண்டாடினர். தம்பி இது நோலன் படம் சொல்லவா வேண்டும் என்பது போல ரசிகர்கள் இப்போதே டிக்கெட் முன்பதிவில் அனல் தெறிக்க விட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள 2 ஐமேக்ஸ் தியேட்டர்களும் முதல் நாளுக்கு ஏற்கனவே ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டன. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் உள்ள ஐமேக்ஸ் தியேட்டர்களில் 91 ஆயிரம் டிக்கெட் முன் பதிவுகள் நடைபெற்றுள்ளன. மேலும், புக் மை ஷோவில் 1.4 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

Advertisement

இந்தியாவில் மட்டும் இத்தனை கோடியா?: இந்தியாவில் மட்டும் இதுவரை அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங்கில் 20 கோடி ரூபாய்க்கு மேல் தி ஒடிஸி படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நோலனின் முந்தைய படமான ஓபன்ஹெய்மர் படம் 1923 ஸ்க்ரீன்களில் இந்தியாவில் வெளியான நிலையில், தி ஒடிஸி திரைப்படம் 2500 ஸ்க்ரீனிகளில் வெளியாக காத்திருக்கிறது. இந்த வாரம் தி ஒடிஸி படத்தை பார்த்துவிட்டுத்தான் அன்பே டயானா பக்கம் ரசிகர்கள் போவார்கள் என்கிற அளவுக்கு இந்த படத்திற்கான ஹைப் உள்ளது.