சென்னை: கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி உள்ள படமான தி ஓடிஸி படமானது உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படி இருக்கையில் படத்தின் வெற்றிக்கு இந்தியாவில் ஆகவுள்ள வசூலானது பெருமளவுக்கு உதவும் என்று படக்குழு எதிர்பார்ப்பதால் படக்குழு இந்தியாவுக்கு வந்து புரோமோஷன் செய்து விட்டுச் சென்றுள்ளது. இந்தியாவில் 16 ஆம் தேதியே பிரீமியர் காட்சிகள் திரையிடப்படவுள்ளது. இந்நிலையில் சர்வதேச அளவில் பல்வேறு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அந்த விமர்சனங்கள் படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, ஆடைகளின் வடிவமைப்பு, வசன உச்சரிப்பு உள்ளிட்டவற்றை கடுமையான கேள்விகளைக் கொண்டு விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட பட்டுள்ளது. அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
தி ஓடிஸி படத்தின் கதையானது சுமார் மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்க மன்னன் ஓடிஸி குறித்து, ஹோமர் எழுதிய ஓடிஸி இலக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்டது. முழுக்க முழுக்க கிரேக்கர்களை மையப்படுத்திய இந்த கதையை ஒரு ஹாலிவுட் இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன் கதாபாத்திரங்களில் நடிக்க தேர்வு செய்யப்பட்ட நடிகர்கள் மீது பெரும் கேள்விகள் முன் வைக்கப்படுகிறது.
அதாவது, ஹோமரின் கூற்றுப்படி, ஹெலன் கருப்பினப் பெண் கிடையாது. மாறாக அவர் கிரேக்கர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிறம் மற்றும் அதை விட கூடுதலான வெளிர் நிற தோற்றம் கொண்டவர் என்றுதான் கிரேக்க ஓவியங்கள் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் ஹோமர் மிகத் தெளிவாக நிறத்தை எல்லாம் குறிப்பிடாமல் அன்பானவர், இரக்க குணம் கொண்டவர், உயரிய பண்புகளை கொண்டவர் என்று வர்ணித்துள்ளார். அப்படி இருக்கையில் அந்த கதாபாத்திரத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற நடிகையான லுபிடா நியாங்கோவை தேர்வு செய்தது முழுக்க முழுக்க கிரேக்கர்களையும் ஹோமரின் எழுத்தையும் அவமதிப்பதற்கு சமம் என்று விமர்சித்து வருகிறார்கள். டயலாக்குகள்: அதேபோல், வசன உச்சரிப்புகளுக்கும் கிறிஸ்டோபர் நோலனைப் போட்டு வாட்டி வதக்கி வருகிறார்கள். கதை நடப்பது மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில், அப்போதைய மொழியும், அதை அவர்கள் உச்சரிக்கும் விதமும் மொத்தமாக தற்போது உள்ளது போல இருக்காது. ஆனால் படத்தின் டீசரில், டாம் ஹாலண்ட் அப்பா என்று கூறுவதற்கு பதிலாக தனது ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தைப் போல அப்பா நான் வீட்டுக்கு வந்துட்டேன் என்று கூறுவது எல்லாம் ஹோமரின் எழுத்தையே சீர்குலைக்கிறது என்று வெளிநாட்டு ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பத்திரிகையாளர்களும் கிறிஸ்டோபர் நோலனை எகிறி அடித்து வருகிறார்கள். நடிகர்கள்: அதேபோல் நடிகர்கள் தேர்வில் பலரும் கிரேக்கர்களைப் போல இல்லை, அவர்களுக்கு அப்படியான மேக்-அப்களும் போடப்படவில்லை. கிரேக்க கதைகளில் நீங்கள் எப்படி அமெரிக்கர்களையும் வெள்ளையர்களையும் பிரதிநிதிதுவப்படுத்துவீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் நடிகர்கள் குழுவில் கிரேக்கர்களே இல்லையே என்றும் சராமாரி கேள்விகளை முன் வைத்து வருகிறார்கள். மேலும் போர் வீரர்களின் கவசங்கள் ஏதோ பேட் மேன் படத்தில் வருவது போல இருக்கிறது என்று நேரடியாகவே விமர்சித்துவிட்டனர். இந்த பிரச்னை இப்படி நடந்து கொண்டு இருக்கையில், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல, எலான் மாஸ்க்கோ தனது எக்ஸ் பக்கத்தில், " கிறிஸ்டோபர் நோலன் தனது படைப்பிற்கான உண்மைத்தன்மையில் இருந்து முற்றிலும் விலகிவிட்டார்" என்று பதிவிட்டுள்ளார். புக்கிங்: மொத்தத்தில் தி ஓடிஸி படத்தின் மீது முன்வைக்கப்பட்ட இந்த விமர்சனங்கள் படத்திற்கு ஒரு வகையில் நெகட்டிவ் புரோமோஷன் தான் என்றாலும், படம் வெளியான பின்னர் தான் அது படத்தின் பிசினஸில் தாக்கத்தை ஏற்படுத்துமா இல்லையா என்பது குறித்து கூற முடியும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஐமேக்ஸ் தியேட்டர்கள் உள்ள சென்னை மற்றும் கோவையில் முதல் வாரத்திற்கான அனைத்து காட்சிகளுக்குமான பெரும்பான்மையான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிட்டது.More Articles