சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகி தமிழ் சினிமா வரலாற்றில் மாபெரும் சாதனைகளைப் படைத்த 'கில்லி' திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகர் கில்லி சிவா திடீரென உயிரிழந்துள்ள சம்பவம், திரையுலகினரையும் ரசிகர்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கில்லி ஓப்பனிங் காட்சி: தமிழ் சினிமாவில் விஜய்யின் மாஸ் ஹிட் திரைப்படங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் படம் 'கில்லி'. கடந்த ஆண்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி, புதிய படம் போல பல கோடி வசூலை அள்ளிக் குவித்து சாதனை படைத்தது. இந்தத் திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே கபடி வீரரான விஜய்யை (வேலு)வைசுற்றி வளைக்கும் 'சிவா' என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவா நடித்திருப்பார். என்ன வேலு... இந்த இடம் எங்க ஏரியா... நல்லா மாட்டுனியா? என அவர் மிரட்டலாகப் பேச, அதற்கு விஜய் சொடுக்கு போட்டுக்கொண்டே, என்ன சொன்ன... உங்க ஏரியாவா? இந்த ஏரியா... அந்த ஏரியா... எந்த ஏரியாலயும் எனக்குப் பயம் கிடையாது டா... ஏன்னா ஆல் ஏரியாலயும் நான் கில்லிடா எனப் பேசும் மாஸ் வசனக் காட்சி ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாது.
கில்லி சிவா: அந்த ஒற்றைக்காட்சி மூலமாகவே மக்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலமடைந்த அவரை, அன்றிலிருந்து அனைவரும் அன்போடு கில்லி சிவா என்றே அழைக்கத் தொடங்கினார்கள். கில்லி படம் மட்டுமின்றி, விஜய்யுடன் சேர்ந்து மதுர, குருவி உள்ளிட்ட பல முன்னணித் திரைப்படங்களிலும் இவர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படி பல படங்களில் நடித்துக் குணச்சித்திர நடிகராக வலம் வந்த கில்லி சிவா, திடீரென உயிரிழந்துள்ளார். இந்த செய்தி அவரின் நண்பர்களையும் குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. சிவாவிற்கு என்ன ஆனது, உயிரிழப்புக்கான காரணம் என்ன... அவரின் வயது என எந்தவிதமான தகவலும் முழுமையாக கிடைக்கவில்லை
More Articles
- CM விஜய்யைப் பார்க்க வந்த கில்லி பட நடிகை ஏமாற்றம்.. திருப்பி அனுப்பிய போலீசார்!
- Ghilli vs Thunivu Re release Box Office: 2வது முறை ரீ ரிலீஸான கில்லி கோடிக்கணக்கில் வசூல்.. துணிவு?
- கில்லிக்குத்தான் கூட்டம்.. மெயின் ஸ்க்ரீன்ல துணிவு போடல.. அஜித் ரசிகர்கள் புலம்பித்தள்ளிட்டாங்களே!
- Mankatha Re Release Box Office: கில்லியை இல்லை.. படையப்பாவை கூட ஓவர்டேக் பண்ணாத மங்காத்தா வசூல்!
- Mankatha Vs Ghilli Box Office - மங்காத்தா வசூலில் காட்டும் கெத்து.. கில்லி சாதனைக்கு குழி தோண்டியாச்சா?
- Trisha: கில்லிக்கு தியேட்டர் விசிட்.. மங்காத்தாவுக்கு ஒரு போஸ்ட் கூட போடாத த்ரிஷா.. ரொம்பத்தான் ஓரவஞ்சனை