சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். அனிருத் இசையமைப்பில், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இத்திரைப்படம் வரும் வியாழக்கிழமை (ஜூன் 23-ஆம் தேதி) உலகம் முழுவதும் 3000-க்கும் அதிகமான திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 950 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட உள்ளது.
ஜனநாயகன்: முதலமைச்சர் விஜயின் கடைசிப் படம் என்பதால் ஒட்டுமொத்த ரசிகர்களும் வெறித்தனமான எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில், படத்தின் டிக்கெட் முன்பதிவு குறித்து தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அதிரடித் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ஜனநாயகன் திரைப்படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இன்று இரவுக்குள் தொடங்கிவிடும். விஜய் அவர்கள் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு வெளியாகும் முதல் மற்றும் கடைசிப் படம் என்பதால், ஆன்லைன் புக்கிங் எப்போது தொடங்கும் எனப் பலரும் ஆர்வமாக கேட்டு வருகிறார்கள். ஆன்லைனில் புக்கிங் ஓப்பன் செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிடும் என்று நான் நினைக்கிறேன்.
காத்திருந்த ரசிகர்கள்: தொடர்ந்து பேசிய அவர், இந்தத் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கே வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். கொஞ்சம் தாமதமாக வெளியாகிறது. இருப்பினும், விஜய் முதலமைச்சரான பிறகு வரும் படம் என்பதால் ரசிகர்களின் கொண்டாட்டம் அதிகமாக இருக்கும். ஏற்கனவே ஜனநாயகன் படம் ஆன்லைனில் கசிந்துவிட்டது. ஆனால், பல ரசிகர்கள் அந்தப் படத்தைக் கள்ளத்தனமாகப் பார்க்க மாட்டோம், தியேட்டரில் தான் பார்ப்போம் என வைராக்கியமாக இருக்கிறார்கள். இதனால் மக்கள் இத்திரைப்படத்தை மிகப்பெரிய ஒரு கொண்டாட்டமான படமாகத்தான் பார்ப்பார்கள். ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் நாள் ஒரு பண்டிகை நாள் போலத்தான் இருக்கப் போகிறது. முதலமைச்சர் விஜய்க்கு ஏராளமான பெண் ரசிகர்கள் அதிகம் என்பதால், திருப்பூர் மற்றும் பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் பெண்களுக்கென்று காலை 9 மணிக்குச் சிறப்புக்காட்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம் என்று திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
More Articles
- 100 கோடி ஓபனிங்.. ஹாட்ரிக் அடிப்பாரா விஜய்.. லியோ, கோட் வசூல் சாதனையை முறியடிக்குமா ஜன நாயகன்?
- Jana Nayagan Second Single - ஜனநாயகன் இரண்டாவது சிங்கிள்.. டைட்டிலில் சி.எம் விஜய்.. பாட்டு சூப்பர்
- கணவருடன் முதலமைச்சர் விஜய்யை சந்தித்த சர்கார் வில்லி.. ரியல் சர்காரே அமைச்சிட்டாரே!
- தியேட்டர்ல நீங்க பார்க்கப் போறது லீக்கான ஜன நாயகனே இல்லையா?.. தயாரிப்பாளர் சொன்ன செம ட்விஸ்ட்!
- முதல்வன் பட சீனையும் ரீக்ரியேட் செய்த சிஎம் விஜய்.. ஃபயர் விட்டுக் கொண்டாடும் ஜன நாயகன் ஆர்மி!
- ஜனநாயகனை எப்போது வேண்டுமானாலும் ரிலீஸ் பண்ணுங்க.. இதை முதலில் செல்லுங்க? ரசிகர்களின் மதிப்புமிக்க கேள்வி