சென்னை: முதலமைச்சராக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த மே மாதம் 10ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் அவரது தமிழக வெற்றிக் கழகம் பெருமான்மைக்குத் தேவையான இடங்களை வெல்லவில்லை என்றாலும், மற்ற கட்சிகளைக் காட்டிலும் அதிக இடங்களில் அதாவது 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

Advertisement

அவரது தலைமையில் தமிழ்நாடு அரசு கடந்த இரண்டு மாதங்களாக செயல்பட்டு வருகிறது. அவரது கட்சியினர் முதலமைச்சர் விஜய்யின் செயல்பாட்டை பாராட்டுவதும், எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சிப்பதும் அரசியல் களத்தில் பரபரப்பாக இருக்கின்றன. இது மட்டும் இல்லாமல் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்க ஆதரவு அளித்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் விசிகவுமே சில இடங்களில் முதலமைச்சர் விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement

இப்படி இருக்கையில், முதலமைச்சராக விஜய்யின் நடவடிக்கைகள் எப்படி உள்ளது என்ற கேள்வியை அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்த பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் நடுவர், பேராசிரியர் சாலமன் பாப்பையாவிடம் கேட்டனர். அதற்கு அவர், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடு நன்றாக இல்லை. போக போக பார்க்கலாம். இதுவரை நன்றாக இல்லை" என்று பதில் அளித்துள்ளார். இவரது இந்த பதில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

இவரது இந்த கருத்துக்கு தவெகவினர் மற்றும் விஜய் ரசிகர்கள் பலரும் சாலமன் பாப்பைய்யயாவை மிகவும் மோசமாக விமர்சித்து வருகிறார்கள். மேலும் அவரது கருத்துக்கு ஆதரவாக கருத்துக்களையும் பார்க்க முடிகிறது. மேலும் அந்த பேட்டியின் போது சாலமன் பாப்பையாவிற்கு அருகில் நகைச்சுவைக் கலைஞர் மதுரை முத்துவும் உடன் இருக்கிறார். அவரும் சாலமன் பாப்பையாவின் பேச்சுக்கு தலை அசைத்து வருவதால் அவரையும் சிலர் சமூக வலைதளத்தில் அட்டாக் செய்து வருகிறார்கள்.