சென்னை: தமிழ் சினிமாவில் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் ஒரு படம் வருகிறது என்றாலே ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி தான். இவரது இயக்கத்தில் ஒரு படம் பார்க்கும்போது மொத்தமாகவே ஒரு வாழ்வை வாழ்ந்தது போன்ற உணர்வைக் கொடுத்து விட்டார் என்ற பாராட்டுக்களும் விமர்சனங்களும் எப்போதும் உண்டு. இப்படி இருக்கையில் வெற்றி மாறனும் தனுஷ்ஷும் இணைகிறார் என்றால் அது சினிமா ரசிகர்களுக்கு ட்ரீட் தான். இவர்கள் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட். இப்படி இருக்கையில் இவர்கள் கூட்டணியில் தமிழ் முருகன் என்ற படம் உருவாகிறது என்ற அறிவிப்பு மொத்த தமிழ் சினிமா உலகத்தினரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Advertisement

அதாவது இவர்கள் கூட்டணியில் ஒரு படம் உருவாகிறது என்றால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஆனால் தற்போது வெற்றி மாறனோ தனது அரசன் மற்றும் ராஜன் வகையறா என இரண்டு படங்களையும் ஒரு சேர எடுத்து வருகிறார். இதன் மொத்த வேலைகளும் முடிந்து, படங்கள் அடுத்தடுத்து வெளியாக இன்னும் ஒரு ஆண்டுக்கு மேல் ஆகலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் தனுஷ் தற்போது தனது 55ஆவது படமான இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மம்முட்டி, சாய் பல்லவி உள்ளிட்டோருடன் இணைந்து நடித்து வருகிறார். அடுத்ததாக அவரது லைன் -அப்பில் தமிழரசன் பச்சைமுத்து உடனான படம், மாரி செல்வராஜ் உடனான படம் என உள்ளது. இது இல்லாமல் ஏற்கனவே அறிவித்த புதுப்பேட்டை 2, வட சென்னை 2 என படங்கள் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு உள்ளது.

Advertisement

இந்நிலையில் தமிழ் முருகன் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இண்ட்ரோ வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்கள். தமிழ் முருகன் எனும்போது இது தமிழ் கடவுள் முருகனை மையப்படுத்திய கதைக்களம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில், இவ்வளவு லைன் - அப்கள் இருக்கும் போது இந்த படத்தின் அறிவிப்பை இப்போது வெளியிட மிகவும் முக்கியமான காரணம் உள்ளது என்ற பேச்சும் அடிபடுகிறது.

தமிழ் முருகன் vs திரிவிக்ரம்: அதாவது கடந்த வாரத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் திரிவிக்ரம் என்ற பான் இந்தியா படம் உருவாகிறது என்ற அறிவிப்பு வெளியானது. அதில் முருகன் குறித்து, வடக்கில் தோன்றி மத்தியில் வளர்ந்து தெற்கே குடிகொண்டவர் என்ற சர்ச்சைக்குரிய வாசகம் இடம் பெற்றது. இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக தமிழ் கடவுள் முருகன் வடக்கே பிறந்தவர் என்பது தவறான கருத்து என்று கூறினார்கள். பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சி அதிகாரப்பூர்வமாக கண்டன அறிக்கையும் வெளியிட்டது.

Advertisement

பாராட்டு: தமிழ் கடவுள் முருகன் குறித்த இப்படியான டிஷ்கஷன் திரை உலகில் நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது, தமிழ் முருகன் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, திரிவிக்ரம் படக்குழிவினருக்கு பதிலடி கொடுத்துள்ளது என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். மேலும் ஒரு மறுப்பு வீடியோ போடலாம், மறுத்து கட்டுரை எழுதலாம் ஆனால் நம்ம ஆட்கள் மறுப்புக்கு படமே எடுக்கறாங்கப்பா.. சும்மாவா முருகனை விட்டுக் கொடுத்துவிட முடியுமா என்று எல்லாம் பாராட்டி வருகிறார்கள்.