சென்னை: தனுஷ் இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் படத்தில் நடித்துவருகிறார். இதனை முடித்துவிட்டு மாரி செல்வராஜ், வெற்றிமாறன் உள்ளிட்டோரின் இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதற்கிடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வந்தன. ஆனால் அதற்கு பிறகு அந்தப் படத்தின் நிலைமை என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது.

Advertisement

தனுஷுக்கு கடந்த சில வருடங்களாகவே சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி கிடைக்கவில்லை.கடைசியாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த அவரது படம் என்றால் திருச்சிற்றம்பலம்தான். அதற்கு பிறகு அவர் நடித்த கேப்டன் மில்லர், ராயன், குபேரா, இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன், கர ஆகிய படங்கள் ஒன்று சுமாராக இருந்தன இல்லை ரொம்ப மோசமாக இருந்தான். இதனால் எப்படியாவது ஒரு கமர்ஷியல் வெற்றியை பெற்றுவிட வேண்டும் என்பதில் மிக தீவிரமாக உழைத்துவருகிறார் அவர்.

Advertisement

Photo Credit:

தனுஷின் ஓம்: அதுவும் மேற்கூறிய படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் எல்லாம், இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். என்னை நம்பி தியேட்டருக்கு செல்லுங்கள் என பேசவும் செய்திருக்கிறார். அதை நம்பி சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. இப்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருடன் மம்மூட்டி, சாய் பல்லவியும் நடிக்கிறார்கள். சாய் அபயங்கர் படத்துக்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தப்பிக்குமா ஓம்: அந்தப் படமானது அக்டோபர் 16அம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அக்டோபர் 15ஆம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் வருகிறது. சூப்பர் ஸ்டார் படத்துடன் மோதி தனுஷின் ஓம் தப்பிக்குமா என்ற அச்சமும் அவரது ரசிகர்களிடம் இருக்கிறது. அதேசமயம் எதற்கு வம்பு, ரிலீஸை தள்ளி வைக்கலாம் என படக்குழு முடிவு எடுத்தாலும் ஆச்சரியத்துக்கு இல்லை என்றும் கூறுகிறார்கள் திரைத்துறையினர். அதேசமயம் கதையும், மேக்கிங்கும் சூப்பராக இருந்தால்; ஒரு ரஜினி இல்லை பல ரஜினி வந்தாலும் வெற்றியை தடுக்க முடியாது என்பது கருத்து.

Advertisement

வினோத்துடன் படம்: இந்தப் படத்தை முடித்துவிட்டு மாரி செல்வராஜ், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதற்கிடையே ஹெச்.வினோத்துடன் ஒரு படத்தில் இணைவது என தனுஷ் முடிவு செய்திருந்தார். தீரன், சதுரங்க வேட்டை போன்று ஓஜி வினோத் ஸ்டைலில் அந்தக் கதை இருக்கும் என்றும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் அந்தப் படத்தின் மீது எக்கச்சக்க ஆர்வத்தை பலரும் வைத்திருந்தார்கள். ஆனால் அதற்கு பிறகு படத்தின் நிலைமை குறித்து எதுவுமே தெரியவில்லை.

விளக்கமளித்த வினோத்: இந்நிலையில் ஜனநாயகன் ப்ரோமோஷனுக்காக தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனுஷுடனான படம் குறித்த பேச்சு வந்தது. அப்போது பேசிய அவர், "நானும், தனுஷும் இணைவதாக இருந்த படம் நடக்கவில்லை. அந்தப் படத்துக்கான பட்ஜெட் விஷயங்கள் எல்லாம் இருக்கிறது. ஆனால் அவருக்கு கதை பிடித்திருந்தது. கதை பிடித்திருந்தாலும் அவருடைய முந்தைய படங்களின் வெற்றி, தோல்வி இருக்கிறது. அதனுடைய நம்பர் விஷயங்கள் எல்லாம் இருக்கின்றன. அதையெல்லாம் பார்ப்பார்கள்" என தெரிவித்திருக்கிறார்.

Advertisement

ஆக, தனுஷ் - வினோத் படம் ட்ராப்பாகிவிட்டது உறுதியாகிவிட்டது. இதை கேட்ட தனுஷ் ரசிகர்களோ கண்களில் ரத்த கண்ணீர்தான் வடிக்கிறார்கள். தேடி தேடி வரும் நல்ல கதைகளை எல்லாம் விட்டுவிட்டு; தனுஷ் கதைகளை தேடி போகிறார். அப்படி சென்று வெற்றி பெற்றால் பரவாயில்லை; தோல்வியைத்தான் பெறுகிறார். வினோத்துடனான படத்தை அவர் மிஸ் செய்திருக்கவே கூடாது; தீரன், சதுரங்க வேட்டை ஸ்டைலில் ஒரு கதையை வினோத் சொல்லியிருந்தால் தாராளமாக அந்த ஒரு படத்தில் நடித்திருந்தால் அது பத்து படங்கள் நடித்ததற்கு சமமாகவும் இருந்திருக்கும், பெரிய வெற்றியும் கிடைக்கும் என்றும் D ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.