சென்னை: 72வது தேசிய விருதுகள் சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. அவற்றில் சிறந்த தமிழ் படமாக ராயனும், கேப்டன் மில்லர் படமும் விருதுகளை பெற்றிருக்கின்றன. இதன் மூலம் இரண்டு தேசிய விருதுகளை தனுஷ் வென்றிருக்கிறார். அவரது கரியரில் மொத்தம் ஐந்து விருதுகள் அவரை தேடி வந்திருக்கின்றன. இந்நிலையில் இயக்குநரும், தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மேலும் அந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். அதனைத் தொடர்ந்து விசாரணை படத்துக்காக சிறந்த தயாரிப்பாளருக்கான விருதையும், அசுரன் படத்துக்கு சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார்.மொத்தம் மூன்று தேசிய விருதுகள் பெற்ற கலைஞராக ஜொலித்தார் அவர்.
இரண்டு விருதுகள்: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு 72வது தேசிய விருதுகள் சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. அவற்றில் ராயன் படம் சிறந்த தமிழ் படமாகவும், கேப்டன் மில்லருக்காக ஸ்பெஷல் மென்ஷனில் சிறந்த நடிகருக்கான விருதையும் தனுஷுக்கு அறிவித்திருக்கிறார்கள். இதன் மூலம் இயக்குநராக முதல் தேசிய விருதை அவர் பெறுகிறார். மொத்தம் ஐந்து தேசிய விருதுகளை அவர் இதுவரை அள்ளியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுந்த விமர்சனங்கள்: தனுஷுக்கு வாழ்த்து குவியும் அதே நேரத்தில் விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. அதாவது ராயன், கேப்டன் மில்லர் படங்களில் ஒன்றுமே இல்லை; அதற்கெல்லாம் எதற்கு விருது கொடுக்கிறார்கள் என சகட்டுமேனிக்கு விளாசுகிறார்கள். இந்நிலையில் இயக்குநரும், தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
கஸ்தூரி ராஜா பேச்சு: அப்போது பேசிய அவர், "தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி. அவர் பயணம் செய்யும் வழியும், சிந்தனையும் ஒரே மாதிரி இருப்பதால் அவருக்கு விருதுகள் கிடைத்துவிடுகின்றன. மற்றபடி இதில் எந்த இன்ஃப்ளூயன்ஸும் இல்லை. முழுக்க முழுக்க அவரது முயற்சிதான். இரண்டாவது இது அரசு ஜூரிக்கள் எடுக்கும் முடிவு. இந்த முறை இரண்டு விருதுகள் கிடைத்திருப்பது பெருமையான விஷயமாக பார்க்கிறேன். இன்னும் தொடர்ந்து வாங்குவார்.
கேக் வெட்டினார்: தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டபோது தனுஷின் வீட்டுக்குத்தான் சென்றுகொண்டிருந்தேன். எனவே வாழ்த்து சொல்வது ஈஸியாகிவிட்டது. வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் சந்தோஷம். கேக்கெல்லாம் வெட்டினார். தனுஷை சுற்றி வரும் விமர்சனங்கள் எல்லாம் ஏன் வருகிறதென்று தெரியவில்லை. தனுஷைவிடவும் பெரிய நடிகர்கள் தமிழ்நாட்டில் இல்லையா? அவர்கள் இன்ஃப்ளூயன்ஸ் செய்து அந்த விருதுகளை வாங்கியிருக்கலாமே.
இது அரசு எடுக்கும் முடிவு. நான்கு பேரை பார்த்து எனக்கு விருது கொடுங்கள் என சொல்லும் புத்திசாலித்தனமெல்லாம் தனுஷுக்கு கிடையாது. விருதுகளை எல்லாம் அவர் இப்போது புதிதாகவா பார்க்கிறார். விருதுகளுக்காக ஏங்கும் பையன் தனுஷ் இல்லை. மம்மூட்டி வாங்கியிருப்பதெல்லாம் பெரிய மகிழ்ச்சி. அவரை பாராட்ட வேண்டும். நம் பையன் அந்த சிந்தனையில் இருக்கிறார் என்று நினைக்கும்போது சந்தோஷம்" என்றார்.