சென்னை: இந்திய அளவில் சினிமா துறைக்கென வழங்கப்படும் விருதுகளில் தேசிய விருதுக்கென்று தனி மதிப்பு இருக்கிறது. அந்தவகையில் 72வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில் தனுஷுக்கு மொத்தம் இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. இதன் காரணமாக அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் தனுஷ். நடிகராக மட்டுமின்றி இயக்குநர் அவதாரத்தையும் பவர் பாண்டி திரைப்படத்தில் எடுத்திருந்தார். அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை ஆகிய மூன்று படங்களை இயக்கி இரண்டு படங்களில் தோல்வியையே பெற்றார். இருப்பினும், ஒரு இயக்குநராக அவரது வேலைப்பாடுகள் அனைவரையும் கவர்ந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
72வது தேசிய விருது: சூழல் இப்படி இருக்க இன்று 72வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்த விருதுக்கென்று எப்போதுமே தனி மவுசு உண்டு. இந்திய திரைத்துறையில் இருப்பவர்கள் எப்படியாவது ஒரு தேசிய விருதையாவது பெற்றுவிட வேண்டும் என்று மெனக்கெட்டு உழைப்பார்கள். ஏற்கனவே ஆடுகளம் மற்றும் அசுரன் படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், விசாரணை படத்துக்காக சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
மீண்டும் விருதுகள்: இப்போது தனுஷ் மீண்டும் தேசிய விருதை பெற்றிருக்கிறார். அதாவது, கேப்டன் மில்லர் படத்துக்காக சிறப்பு பிரிவிலும், சிறந்த தமிழ் படம் என்ற பிரிவில் ராயன் படத்துக்கும் இப்போது அவர் விருதுகளை பெறவிருக்கிறார். நடிகராக, தயாரிப்பாளராக தேசிய விருதை வாங்கிய தனுஷ், இப்போது முதன்முறையாக இயக்குநராக தேசிய விருதை பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
குவியும் வாழ்த்து: தனுஷ் இப்போது சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். விருதுகள் பெறுவது அவருக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. தற்போது அவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இரண்டு தேசிய விருதுகளையும் சேர்த்து; இதுவரை மொத்தம் ஐந்து தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. போகிறபோக்கை பார்த்தால் விருதுகளை வைப்பதற்கு தனுஷின் அலமாரியில் இடமே இருக்காது போல என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.
தனுஷின் அடுத்த படம்: இந்தப் படங்கள் தவிர்த்து அமரன், மெய்யழகன் படங்களுக்கும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தனுஷின் லைன் அப்பை பொறுத்தவரை இப்போது ஓம் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அது அக்டோபர் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. அதை முடித்துவிட்டு மாரி செல்வராஜ், வெற்றிமாறன் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படங்களுக்கு அவர் தேசிய விருது பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
More Articles
- Jr NTR படத்தை துவம்சம் செய்யனும்.. வைராக்கியத்தில் வெற்றி மாறன் - தனுஷ்.. தமிழ் முருகன் காக்க
- தனுஷின் D56.. சென்சேஷனல் நடிகைதான் ஹீரோயினாம்.. ஜோடி பொருத்தம் பக்காவா இருக்குமே பாஸ்
- என் சக்திக்கு அவ்வளவுதான் முடியும்.. தனுஷ் படம் பற்றி இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து ஓபன்
- திரிவிக்ரமை அடிச்சு ஓடவிடுறோம்.. தனுஷ் படத்துக்கு என்னமா ஆதரவு குவியுது.. ஷூட்டிங் எப்போ ஸ்டார்ட் பண்றீங்க?
- LOL Box Office: தனுஷ் மருமகன் 2வது படம் என்ன ஆச்சு?.. லவ் ஓ லவ் முதல் நாள் வசூல் இத்தனை லட்சம் தானா?
- சபாஷ் சரியான போட்டி.. யாருக்கு தனுஷ் vs ஜூனியர் என்டிஆருக்கா?.. இல்லை Ai vs Ai.. முடியல முருகா!