லாஸ் ஏஞ்சல்ஸ்: கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான தி ஒடிஸி திரைப்படம் உலகளவில் கடந்த வாரம் தொடங்கி இந்த வாரமும் வசூலில் சக்கைப் போடு போட்டு வருகிறது. ஆனால், அதற்கு இணையாக சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட விமர்சனங்களையும் படம் சந்தித்து வருகிறது.
70 ஆண்டுகளுக்கு முன்பாக 1954ம் ஆண்டு எடுக்கப்பட்ட Ulysses படத்தில் இருந்து இதுவரை டஜன் கணக்கான ஹோமர் எழுதிய ஒடிஸி கதையில் இருந்து பல படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில் உலிசஸ் படமே அற்புதமாக உள்ளது என்றும் கலிப்ஸோ முதல் பல விஷயங்களை அந்த காலத்திலேயே அற்புதமாக காட்டியுள்ளனர் என்றும் டிராய் படத்தின் கதாபாத்திரங்கள் கச்சிதம் என்றும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், க்ரோக் இமேஜின் ஏஐ மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஹோமர் எழுதிய ஒடிஸி கதையை தத்ரூபமாக ஏஐ மூலம் படமாக்குவேன் என எலான் மஸ்க் சவால் விடுத்துள்ளார். தி ஒடிஸி உலக வசூல்: கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் மேட் டேமன், டாம்ஹாலண்ட், ஜெண்டாயா, அன்னா ஹாத்வே, ராபர்ட் பாட்டின்சன் உள்ளிட்ட பலர் நடித்த தி ஒடிஸி திரைப்படம் கடந்த வாரம் ஜூலை 17ம் தேதி உலகளவில் வெளியானது. இந்தியாவில் இந்த படம் இதுவரை 92 கோடி ரூபாய் வசூலை ஈட்டி மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. பல இந்திய படங்களே 100 கோடி வசூலுக்கு இந்த ஆண்டு திணறி வரும் நிலையில், இந்தியாவில் அதிகபட்சமாக 150 கோடி வரை இந்த படம் வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் 300 மில்லியன் டாலர் வசூலை நெருங்கியுள்ளது. இந்திய மதிப்பில் 2200 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் இதுவரை 2800 கோடி வசூலை கடந்துள்ளது. ஏஐ மூலம் ஒடிஸி திரைப்படம்: கிரோக் இமேஜின் மூலமாக ஹோமர் கதையில் வரும் காட்சிகளை வீடியோவாக எடுத்துள்ளோம் என பதிவிடப்பட்ட எக்ஸ் போஸ்ட்டுக்கு பதில் அளித்த எக்ஸ் மற்றும் டெஸ்லா ஓனர் எலான் மஸ்க் இந்த ஆண்டு இறுதியில் க்ரோக் இமேஜினில் முழு நீள ஒடிஸி திரைப்படம் ஹோமரின் கதையை அப்படியே உணர்ச்சி மாறாமல் திரையில் கொண்டு வரும் என பதிவிட்டுள்ளார். இது அவர் கிறிஸ்டோபர் நோலனுக்கே விடும் சவாலாக மாறியுள்ளது. என்ன தான் ஏஐ மூலம் ஒடிஸி படம் உருவானாலும், ரத்தமும் சதையுமாக கிறிஸ்டோபர் நோலன் உருவாக்கியது போல வரவே முடியாது என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.More Articles