சென்னை: திரையுலகில் இருந்து வந்து, இன்று தமிழகத்தின் முதலமைச்சராக அரியணையில் அமர்ந்திருக்கும் விஜய், சினிமா பிரபலங்கள் யாராவது தன்னைச் சந்திக்க வந்தால் மறுப்புச் சொல்லாமல் தொடர்ந்து சந்தித்து வாழ்த்துகளைப் பெற்று வருகிறார். அந்த வகையில், 'குருவி' படத்தில் விஜய்க்குத் தாயாக நடித்த மூத்த நடிகை டி.கே.கலா, முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்கச் சென்றிருந்தார். ஆனால், உரிய முன் அனுமதி பெறாததால் அவரைப் பார்க்க முடியாமலே ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார்.

Advertisement

நடிகை ஏமாற்றம்: இந்தச் சம்பவத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகை டி.கே.கலா, தம்பி விஜய் நடித்த குருவி படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். அதுமட்டுமில்லாமல், கில்லி படத்திலும் நான் அவருடன் நடித்திருக்கிறேன். சொல்லப்போனால், அவர்களுடைய ஃபேமிலி பிரண்ட் என்று கூட சொல்லலாம். தம்பி சிறு வயதிலிருந்தே எங்க ஏரியாவில்தான் வளர்ந்தார். அவர் இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார், அவரைப் பார்த்துச் சந்தோஷப்பட்டு, நேரில் வாழ்த்திவிட்டுப் போகலாம் என்ற எண்ணத்தில்தான் நான் இங்கு வந்தேன். ஏனென்றால் அவர் இன்னைக்கு நேற்று எனக்குப் பழக்கமில்லை, அவரது குடும்பத்தில் இருக்கும் அனைவரையுமே எனக்கு நன்றாகத் தெரியும், என்னையும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். என்னுடைய அம்மாவையும் அவர்களுக்குத் தெரியும். அதனால் எங்களுக்குள் ஒரு குடும்ப நட்பு இருக்கிறது. தம்பி விஜய் சீரும் சிறப்புமாக, ஒரு நேர்மையான ஆட்சியைத் தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டிருக்கிறார்.

Advertisement

அமைதியா இருந்த விஜய் பிச்சி உதறுறார்.. அவர் முதலமைச்சரானது எனக்கு ஆச்சரியம்.. ரோஜா பேட்டி!

நடிகை ஏமாற்றம்: இதனால், தம்பியை நேரடியாக வாழ்த்திவிட்டுப் போகலாம் என்றுதான் வந்தேன் என்றார். ஆனால், முதலமைச்சரைச் சந்திக்க நடிகை டி.கே.கலா முன்கூட்டியே எந்தவொரு அனுமதியும் பெறாமல் வந்ததால், அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் பாதுகாப்பு அவரை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார்கள். இந்தச் செய்தி சோசியல் மீடியாவில் பரவியதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள், பெரிய நடிகைகளான சமந்தா, குஷ்பூ, சிம்ரன், சினேகா எனப் பலரும் தங்களது குடும்பத்தோடு வந்து முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து, புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் சிறிய நடிகையாக இருக்கும் இதுபோன்ற மூத்த நடிகைகளை உரிய அனுமதி இல்லை என்று கூறி புறக்கணிப்பது சரியில்லை என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.