யுடர்ன் ரிலீசாகட்டும்.. அப்புறம் ‘அவரை’ கொல்லப் போகிறேன்: மிரட்டும் சமந்தா


சென்னை: யுடர்ன் பட இயக்குநர் பவன்குமாரை தான் மிகவும் வெறுப்பதாகவும், பட ரிலீசிற்காகத் தான் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் சமந்தா.

கடந்த 2016ம் ஆண்டு கன்னடத்தில் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, பல விருதுகள் பெற்ற வெற்றிப்படம் யுடர்ன். திரில்லர் படமான இதனை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் பவன்குமார். இப்படத்தில் சமந்தா, ஆதி, நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கோ.தனஞ்ஜெயன் நிறுவனமான கிரியேட்டிவ் எண்டர்பிரைசிஸ் & டிஸ்டிபியூட்டர்ஸ் வெளியீட்டுக்கான உரிமையை பெற்றுள்ளது. இப்படம் இம்மாதம் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று ரிலீசாக இருக்கிறது.

சமந்தாவின் ஆசை:

இந்நிலையில், சென்னையில் நேற்று யுடர்ன் படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய நடிகை சமந்தா, "யுடர்ன் படத்தை கன்னடத்தில் பார்த்தபோதே, இதனை ரீமேக் செய்தால் நான் தான் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அதற்குத் தகுந்தாற்போல், இயக்குநர் பவன்குமாரும் என்னையே நாயகி கதாபாத்திரத்திற்கு அணுகினார்.

கேரக்டர்:

இப்படத்தில் ஜர்னலிஸ்டாக நடித்திருக்கிறேன். நிஜத்தில் என் கேரக்டரும், இப்பட கேரக்டரும் ஏறக்குறைய ஒரே மாதிரி தான் என்பதால் மிகவும் ஈடுபாட்டுடன் இப்படத்தில் நடித்தேன்" என்றார்.

சொதப்பல் காட்சிகள்:

அதனைத் தொடர்ந்து, பவன்குமார் பற்றி சமந்தா காரசாரமான டிவிட்கள் வெளியிடுவது பற்றியும், பதிலுக்கு அவரும் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சமந்தாவின் சொதப்பல் காட்சிகளை வெளியிட்டு பழி வாங்குவது பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது.

ஜாலி பதில்:

அதனைக் கேட்டு சிரித்த சமந்தா, ‘ஏனென்றால் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் வெறுக்கிறோம். பட ரிலீசுக்காகத் தான் காத்திருக்கிறேன். பிறகு பாருங்கள் அவரைக் கொன்று விடுகிறேன்" என ஜாலியாக பதிலளித்தார்.

Have a great day!
Read more...

English Summary

While talking to the media persons in Chennai actress Samantha said that, she hates U-turn director Pawan.