சென்னை: ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய மலையாள நடிகர் விநாயகம், தற்போது புதிய சட்டச் சர்ச்சையில் சிக்கி உள்ளார். 8 வயது சிறுமி ஒருவரின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement

நடிகர் விநாயகம் கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று சிறுமியின் தந்தை நடிகர் விநாயகத்திற்கு எதிராக வேறொரு நபர் ஃபேஸ்புக்கில் போட்டிருந்த ஒரு பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை அனுப்பி இருந்தார். இதனால் கோபமடைந்த விநாயகம், மறுநாள் அதாவது ஜூலை 24 நள்ளிரவு 2 மணியளவில், அந்த வாட்ஸ்அப் மெசேஜையும், அதோடு சேர்த்து அந்த நபரின் வாட்ஸ்அப் ப்ரொபைல் பிக்சரையும் ஸ்கிரீன்ஷாட் எடுத்துள்ளார் அந்த ப்ரொபைல் படத்தில் அந்த நபரின் 8 வயது மகளின் புகைப்படமும் இருந்துள்ளது. இந்த ஸ்கிரீன்ஷாட்டுகளை, விநாயகம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அனுமதியின்றிப் பகிர்ந்துள்ளார்

Advertisement

மன உளைச்சல்: விநாயகத்தின் இந்தப் பதிவைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத பலர் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து, சிறுமியின் குடும்பத்தை அவதூறாகப் பேசி கமெண்டுகளைப் பதிவிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, ஃபேஸ்புக்கில் இருந்த மொபைல் எண்ணை நடிகர் விநாயகத்தின் எண் என்று தவறாகப் புரிந்துகொண்ட பல ரசிகர்கள், அந்த எண்ணிற்குத் தொடர்ந்து கால் செய்து, சிறுமியின் தந்தையை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான சிறுமியின் தந்தை கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை அணுகி, விநாயகம் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், பெண்களின் தனியுரிமையில் தலையிடுதல், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Advertisement

சர்ச்சை விநாயகம்: நடிகர் விநாயகம் இப்படிச் சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறையல்ல இவர், கடந்த கேரளாவில் பொது இடத்தில் குடித்துவிட்டு ஓட்டல் ஊழியர்களிடம் ரகளையில் ஈடுபட்டதால் போலீஸாரால் கைது செய்யப்பட்டார் . அதே போல செப்டம்பர் 2024 ஆம் ஆண்டு கொச்சியிலிருந்து கோவா செல்லும் வழியில் விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் பாதுகாப்புப் படையினருடன் குடித்தே போதையில் மோதலில் ஈடுபட்டார் இப்படி பல வழக்குகள் அவர் மீது இருக்கிறது.