சென்னை: ஜனவரி 9ம் தேதி இந்த ஆண்டு ஜன நாயகன் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் தொடங்கப்பட்ட ஓவர்சீஸ் டிக்கெட் புக்கிங்கே கிட்டத்தட்ட 60 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளிக் கொடுத்தது. தமிழ்நாட்டில் எல்லாம் டிக்கெட் புக்கிங் தொடங்கப்படுவதற்கு முன்பே படம் வெளியாகாது என்பது தெரிந்து விட்டது.

Advertisement

ஜன நாயகன் படம் ஹெச்டி தரத்தில் லீக்கான நிலையில், சுமார் 1.2 கோடி பேர் ஏற்கனவே மொபைல் போன்களிலும், டிவிக்களிலும் குடும்பத்துடன் போட்டு படத்தை பார்த்து விட்டனர். அதன் காரணமாக ஜன நாயகன் டிக்கெட் புக்கிங் தொடங்கிய நிலையிலும், பெரிதாக அட்வான்ஸ் புக்கிங் ஆகவில்லை என அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

ஆனால், ஏற்கனவே லீக்காகி கோடிக்கணக்கில் மக்கள் பார்த்துவிட்ட நிலையிலும், இதுவரை ஜன நாயகன் திரைப்படம் எந்தளவுக்கு அட்வான்ஸ் புக்கிங் மூலம் வசூல் ஈட்டியுள்ளது என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

தவெக புகழ்ச்சி படமல்ல: ஜன நாயகன் படத்தில் விஜய் தளபதி வெற்றிக் கொண்டான் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன் சுருக்கமே TVK தான். ஆனால், படத்தில் விஜய்யின் தவெக அரசியல் பிரச்சார படமாக இருக்காது என்றும் சமூக அக்கறையும் அரசியலும் கலந்த படமாக இருக்கும் என எச். வினோத் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் இந்த ஜன நாயகன் என்றும் லீக்கான படத்தை எந்தளவுக்கு மீண்டும் தியேட்டருக்கு வந்து பார்ப்பார்கள் என தெரியவில்லை. ஆனால், அவர்கள் தியேட்டருக்கு வருவதே தளபதி விஜய்யின் முகத்தை பார்க்க மட்டும் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

அட்வான்ஸ் புக்கிங்: இதுவரை ஜன நாயகன் திரைப்படம் வெளிநாடுகளில் 11 கோடி ரூபாயும், தமிழ்நாட்டில் 6 கோடி ரூபாயும், கர்நாடகாவில் 4 கோடி ரூபாயும் கேரளாவில் 2 கோடி ரூபாயும் வட மாநிலங்களில் 60 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 24 கோடி வரை அட்வான்ஸ் புக்கிங் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பலத்த அடி: ஜன நாயகன் படம் லீக் ஆகவில்லை என்றால் லியோ, கோட் போல பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனையை செய்திருக்கும் என்றும் ஓபனிங் நாள் வசூலே 100 கோடியை கடந்திருக்கும் என்றும் கூறுகின்றனர். ஜன நாயகன் வரும் ஜூலை 23ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், முதல் நாளில் மட்டும் 50 முதல் 60 கோடி ரூபாய் ஓபனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், படம் பெரிதாக வசூல் செய்யுமா? என்பது டவுட்டு தான் என்கின்றனர்.