சென்னை: விஜய்யின் கடைசி படம் பல ஆண்டுகள் ரசிகர்கள் மனதில் கில்லி, போக்கிரி, துப்பாக்கி, கத்தி படங்களை போல ரசிகர்களின் நெஞ்சங்களில் குடியிருக்கும் படமாக இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த படம் பெரிய ஏமாற்றம் தான்.
பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி திரைப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில், அதே கதையை ரீமேக் செய்து சில அரசியல் நெடிகளையும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளையும் மட்டும் சேர்த்து இயக்குநர் வினோத் கிண்டி கொடுத்துள்ளார்.
3 மணி நேரம் 3 நிமிடங்கள் ஓடக்கூடிய ஜன நாயகன் படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் மற்றும் ஏகப்பட்ட கதைகள் இருப்பதால், எதை ஃபாலோ செய்வது, எதை பார்த்து ரசிப்பது என்று தெரியாத வகையில் படம் ஜம்ப் கட் படமகாவே அடுத்தடுத்து ஜம்ப் ஆகி கிளைமேக்ஸில் வந்து நிறைவடைகிறது. 400 கோடி பட்ஜெட்: விஜய்யின் சம்பளத்தை தாண்டி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர்களின் சம்பளமே சுமார் 300 கோடி வரை வந்துவிடும். ஆனால், 100 கோடி பட்ஜெட் எதுக்கு பகவந்த் கேசரி படத்தை ரீமேக் செய்ய என நினைத்த நிலையில், எம் எம் புரொஜெக்ட் என வில்லன் நடத்தும் ஆயுத சப்ளை காட்சிகளுக்காகவும் ஆப்பிரிக்கா கண்டத்தில் ஒரு நாட்டையே மக்களிடம் ஆயுதங்களை கொடுத்து சிவில் வார் வெடிக்க வைத்து வில்லன் நாசமாக்குகிறான் என்கிற காட்சிகளுக்காக பணத்தை தண்ணி போல செலவு செய்துள்ளனர். ஆனால், இந்த படத்துடன் அதை ஒட்டி பார்க்கும் போது படத்துடன் ஒட்டாமல் துண்டாக அது வேறு ஒரு படமாகவே தெரியும் ஃபீலிங் பெரிய நெகட்டிவாக மாறி விடுகிறது. ரோபோ சண்டைக் காட்சிகள்: ஓம் என இருந்த ப்ரொஜெக்ட்டை சென்சார் எம் எம் என மாற்றியமைத்த நிலையில் ரிமோட் ஆர்மி எனப்படும் ரோபோக்கள் சண்டையிடும் காட்சிகளுக்கு செலவிடப்பட்ட சிஜி காட்சிகளுக்காக அதிக மெனக்கெடல்களும் பட்ஜெட்டும் எகிறி இருக்கும் எனத் தெரிகிறது. ஆனால், அதெல்லாம் தேவையில்லாத ஆணிகளாகவும் மீண்டும் எந்திரன் படத்தை பார்த்தது போன்ற உணர்வையுமே தருவது நெகட்டிவாக மாறியுள்ளது. மமிதா பைஜு ஸ்கோர் பண்ணல: பிரேமலு, டியூட் படங்களில் ஸ்கோர் செய்த அளவுக்கு ஜன நாயகன் படத்தில் பெரிதாக மமிதா பைஜு தனது நடிப்பால் ஸ்கோர் செய்யவில்லை என்றே தோன்றுகிறது. பகவந்த் கேசரி படத்தில் ஸ்ரீலீலா பண்ண கதாபாத்திரம் பலரையும் ரசிக்க வைத்தது. ஆனால், அதிலிருந்து எந்த சீனும் மாறாத நிலையில், இவர் செய்வதை கம்பேர் செய்து பார்த்தால் பெரிதாக கனெக்ட் ஆகாதது தான் ஜன நாயகன் படத்துக்கு காஸ்ட்லி மிஸ் என்று எண்னத் தோன்றுகிறது. பகவந்த் கேசரி படத்தை பார்க்காத தளபதி ரசிகர்களுக்கு கண்டிப்பாக ஜன நாயகன் தியேட்டர்களில் ட்ரீட்டாக இருக்கும். ஆனால், எச். வினோத் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களுக்குப் பிறகு அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களிடம் மாட்டிக் கொண்டு தனது முழுத் திறமையையும் காட்ட முடியவில்லையா? அல்லது மழுங்கி விட்டாரா? என்கிற கேள்விகள் தான் கிளம்புகின்றன.More Articles