சென்னை: முதலமைச்சர் விஜய் நடித்த ஜன நாயகன படம் வரும் 23ஆம் தேதி அதாவது ஜூலை மாதம் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்ற தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் ஏற்கனவே வாங்கி வைத்த படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டிற்கு வேலை வந்துவிட்டது என்று ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.
அரசியலில் முழு கவனம் செலுத்தி வரும் முதலமைச்சர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமாக 'ஜன நாயகன்' பார்க்கப்படுவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. ஏற்கனவே சிறப்பு காட்சிக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வைத்திருந்த ரசிகர்கள், "இனி காத்திருப்பதற்கு முடிவு வந்துவிட்டது", "முதல் நாள் முதல் காட்சி உறுதி", "வேலைக்கு லீவ் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு" என்று உற்சாகமாக பதிவிட்டு வருகின்றனர். பலர் தங்களது அலுவலக விடுப்பையும் இப்போதே திட்டமிட்டு வருவதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் குவிந்து வருகின்றன. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக உறுதியானதால், இன்னும் சில நாட்களில் புது டிரெய்லர், புரமோஷன் நிகழ்ச்சிகள் மற்றும் முன்பதிவு குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 'ஜன நாயகன்' திரைப்படத்தின் ஹைப் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.More Articles