சென்னை: ஜன நாயகன் படத்துக்கு சென்சார் கிடைக்காத நிலையில், லைகா நிறுவனம் ஜூலை 31ம் தேதி ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ள 'சிக்மா' படத்தை வெளியிட முடிவு செய்தனர். ஆனால், ஜன நாயகன் திரைப்படத்துக்கு திடீரென சென்சார் கிடைத்து படம் வெளியான நிலையில், சிக்மா படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளிப்போயுள்ளது.

Advertisement

அப்பாவின் கடைசி படமே மகனின் முதல் படத்துக்கு சிக்கலை ஏற்படுத்துவது இதுதான் முதல் முறை என்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசி வருகின்றனர். சிக்மா மட்டுமின்றி ஜன நாயகன் ரிலீஸ் காரணமாக ஏகப்பட்ட படங்களின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளன.

Advertisement

ஜன நாயகன் படம் வெளியான நிலையில், அதற்காக ரிலீஸ் தேதியை மாற்றிய படங்கள் எல்லாம் வரிசையாக ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களில் டிராபிக் ஜாம் செய்யவுள்ள நிலையில், செப்டம்பர் மாதம் ஜேசன் சஞ்சய் படம் வரப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

கடைசி படமும் முதல் படமும்: விஜய்யின் கடைசி படமாக ஜன நாயகன் திரைப்படம் கடந்த ஜூலை 23ம் தேதி வெளியானது. 4 நாட்களில் 217 கோடி ரூபாய் வசூலை ஈட்டி மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள சிக்மா திரைப்படம் ஜூலை 31ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது.

Advertisement

சிக்மா ரிலீஸ் தேதி: வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி மாதவனின் ஜி.டி. நாயுடு மற்றும் லோகேஷ் கனகராஜின் டிசி உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன. இந்த 2 படங்களும் ஜன நாயகன் ரிலீஸ் காரணமாகவே அடுத்த மாதம் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆகஸ்ட் 14ம் தேதி சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ், கவின், நயன்தாரா நடித்த ஹாய் உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன. இந்நிலையில், ஒரேயடியாக செப்டம்பர் மாதம் 18ம் தேதி சிக்மா படத்தை ரிலீஸ் செய்யும் முடிவில் லைகா உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், இன்னமும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.