சென்னை: தனுஷ் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் நேற்று திருவள்ளூரில் ரத்த தான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல விஷயங்களையும் அவர் பேசினார். அதனையடுத்து அவர் அரசியலுக்கு வரப்போவது உறுதி என்ற பேச்சுக்கள் பலமாகவே சோஷியல் மீடியாவில் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் ஒரு பேட்டியில் பேசியிருக்கும் விஷயங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Advertisement

தனுஷ் நாளை தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். அதனையொட்டி நேற்று திருவள்ளூரில் தனுஷ் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக ரத்த தான முகாமும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது. அதில் தனுஷும் கலந்துகொண்டு உதவிகளை செய்தார். அதற்கு பிறகு பேசிய அவர், "ராயன் படத்துக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. அந்த வருடத்தில் ராயனைவிடவும் நல்ல படங்கள் வெளியாகியிருந்தன. அந்தப் படங்களின் ரசிகர்கள் ஆதங்கத்தில் இருக்கிறார்கள். ஆதையும் மதிக்கிறேன்.

Advertisement

Photo Credit:

அப்போதெல்லாம் கிடைக்கவில்லை: அது ஒரு கனா காலம் நடித்தபோது சின்ன பையனாக இருந்தேன். தேசிய விருது கட்டாயம் கிடைக்கும் என சொன்னார்கள். நானும் ஆசையோடு இருந்தேன். ஆனால் விருது கிடைக்கவில்லை. புதுப்பேட்டை, மயக்கம் என்ன, 3, மரியான், ராஞ்சனா, வடசென்னை, கர்ணன் என பல படங்களுக்கும் விருதுகள் கிடைக்கவில்லை. அப்போதெல்லாம் யாருமே ஏன் விருது கொடுக்கவில்லை என்று கேட்கவில்லை. இன்று 90 விழுக்காட்டினர் விமர்சிக்கிறார்கள்.

நமக்கென கூட்டம்: அன்றைக்கு பத்து விழுக்காட்டினர்கூட எனக்கு ஆதரவு கொடுக்கவில்லை. இப்போது பேசுகிறார்கள். தட்டிவிடாதீர்கள்; தட்டி கொடுங்கள். அஜித் சொன்ன மாதிரிதான், 'நீயாக தோத்துட்டன்னு ஒத்துக்குற வரைக்கும் உன்னை யாராலும் தோற்கடிக்க முடியது. நம் கூட்டத்துக்கென்று ஒற்றுமையும், நோக்கமும் உண்டு. அனைவரும் பார்த்து பத்திரமாக வீடு சென்றுவிடுங்கள். உங்கள் பாதுகாப்பே முக்கியம். ஓம் நமச்சிவாய.. ஜெய்" என பேச்சை முடித்துக்கொண்டார்.

Advertisement

அரசியலுக்கு வருகிறாரா?: தனுஷின் இந்தப் பேச்சு பல விவாதங்களை கிளப்பியிருக்கிறது. அதாவது, தனுஷ் பேசியதை வைத்து பார்க்கும்போது கண்டிப்பாக அவர் விரைவில் அரசியலுக்கு வருவார்; அதனால்தான் நலத்திட்ட உதவிகளை எல்லாம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது முன்னெடுத்திருக்கிறார் என்று ஆரூடங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், விஜய்யின் வெற்றிதான் தனுஷுக்கு இப்படி ஒரு தைரியத்தை கொடுத்திருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளன.

அந்தணன் பேட்டி: இந்நிலையில் தனுஷ் குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேசுகையில், "முதலமைச்சர் விஜய்யின் அரசியல் வெற்றியை துல்லியமாக கணித்ததாக சொல்லப்படும் ஜோதிடர் ரத்தன் பண்டிட்டை சந்திக்க நடிகர் தனுஷ் நேரம் கேட்டிருக்கிறாராம். எதிர்காலத்தில் முதலமைச்சராகும் யோகம் தனக்கு இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்வதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதாம்.

Advertisement

போட்டியிட வாய்ப்பு: மேலும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகள் போட்டியிட வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கு உதயநிதி ஸ்டாலின் அரசியல் ரீதியாக ஆதரவு கொடுத்துவருகிறார்" என்றார். அவரது இந்தப் பேட்டி சோஷியல் மீடியாக்களில் புதிய விவாதத்தையும் ஏற்படுத்த தொடங்கிவிட்டது.