காலா படத்தை நீதிபதிகள் பார்க்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்த காஞ்சி. ஸ்ரீதர்


சென்னை: காலா படத்தை நீதிபதிகள் பார்க்க வேண்டுமென்று ஒருவர் மனு அளித்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் காலா. இப்படத்தில் நில எங்கள் உரிமை என்ற கருத்து முன்வைக்கப்பட்டு, அதிகார வர்க்கம் எப்படி அடித்தட்டு மக்களை சுரண்டுகிறது என்பதை காண்பித்திருந்தனர்.

இப்போது, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் காலா திரைப்படத்தை நீதிபதிகள் பார்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

நிலம் இல்லாதவர்களின் கஷ்டம் என்னவென்று தெரிந்துகொள்ளவும், அது எவ்வளவு துயரமானது என புரியவும், நீங்கள் காலா திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என ஸ்ரீதர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நீதிபதிகள் காலா திரைப்படத்தை பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நில எங்கள் உரிமை எனப் பேசிய காலா திரைப்படத்தில், ரஜினிகாந்த், ஈஸ்வரி ராவ், நானா படேகர், ஹூமா குரேஷி, சமுத்திரக்கணி மற்றும் பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

Have a great day!
Read more...

English Summary

High court judges has to watch Rajinikanth movie Kaala to understand people without a land.