ஒருவழியா சூட்டிங்கை முடித்த விக்னேஷ் சிவன்... கேக் வெட்டி கொண்டாட்டம்!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்படுகிறது. படம் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்

நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா 3வது முறையாக இணைந்துள்ளனர். மேலும் விக்னேஷ் சிவன் இந்த ஜோடியை நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்கியுள்ளார்.

ஏப்ரல் 28ல் ரிலீஸ்

ஏப்ரல் 28ல் ரிலீஸ்

படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் மற்றும் ரிலீஸ் உள்ளிட்டவை கொரோனா காரணமாக தள்ளிப் போன நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் ரசிகர்களை வெகுவாக உற்சாகப்படுத்தியுள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதுவரை 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு

நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு

ரவுடி பிக்சர்ஸ் மற்றும் லலித்குமார் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர். படத்தில் பிரபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், ரெடின் கிங்ஸ்லீ, லொள்ளு சபா மாறன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சூட்டிங் நிறைவு

சூட்டிங் நிறைவு

படம் ரிலீசுக்கு தயாராகிவரும் சூழலில், கடந்த சில தினங்களாக படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ள படக்குழு அதை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Recommended Video

'AK62' அஜித்தை இயக்கும் விக்னேஷ் சிவன்… திரைபிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து!
வைரலான புகைப்படங்கள்

வைரலான புகைப்படங்கள்

இந்தக் கொண்டாட்டத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மற்றும் விக்னேஷ் சிவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் படத்தின் பாடல்கள், டீசர் மட்டுமின்றி போஸ்டர்கள் உள்ளிட்டவையும் முன்னதாக வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. படம் முக்கோண காதல் கதையா என்பது குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் யோசித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X