சென்னை: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்த படம் அமரன். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட அப்படத்தை கமல்ஹாசன் தயாரித்திருந்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதுமட்டுமின்றி மொத்தம் மூன்று தேசிய விருதுகளையும் அள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

சிவகார்த்திகேயன் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவான படம் அமரன். சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க; கமல்ஹாசன் தயாரித்திருந்தார். இந்திய இராணுவத்தில் பணியாற்றிய தமிழ்நாட்டை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஏகோபித்த ஆதரவை பெற்றது. மொத்தம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூலித்தது.

Advertisement

Photo Credit:

சிவாவின் மார்க்கெட் சூப்பர்: மேலும் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் மார்க்கெட்டும் இந்தப் படத்தின் மூலம் மேலும் உயர்ந்துவிட்டது. அதிலும் எஸ்கே தன் சம்பளத்தை பன்மடங்கு உயர்த்திவிட்டார் என்றும் தெரிகிறது. எஸ்கேவின் கரியரில் அமரன் படத்துக்கு என்று எப்போதுமே ஸ்பெஷல் இடம் உண்டு. படம் மெகா ஹிட்டானதில் தயாரிப்பாளர் கமலுக்கு மகிழ்ச்சியும், லாபமும் கிட்டின என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூன்று தேசிய விருதுகள்: சூழல் இப்படி இருக்க அமரன் திரைப்படத்துக்கு மொத்தம் மூன்று தேசிய விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சிறந்த இயக்குநராக ராஜ்குமார் பெரியசாமி, சிறந்த பின்னணி இசை வழங்கியதற்காக ஜிவி பிரகாஷ், சிறந்த எடிட்டிங்கிற்காக கலைவாணன் ஆகியோர் இந்த விருதுகள பெறுகிறார்கள். இருப்பினும் பல்லவிக்கும், சிவாவுக்கும் விருது கிடைக்காதது கொஞ்சம் ஏமாற்றம்தான்.

Advertisement

கமல்ஹாசனின் வாழ்த்து: அமரன் படம் மூன்று தேசிய விருதுகளை அள்ளியதைத் தொடர்ந்து பலரும் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் படக்குழுவை வாழ்த்தியிருக்கும் கமல்ஹாசன், "சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை வென்ற ராஜ்குமார் பெரியசாமிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது தெளிவான இயக்கத்திற்கும் கதை சொல்லும் திறமைக்கும் கிடைத்த தகுதியான அங்கீகாரம் இது. சிறந்த பின்னணி இசைக்காக விருது வென்றிருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும், சிறந்த படத்தொகுப்பிற்காக விருது வென்றிருக்கும் கலைவாணனுக்கும் எனது பாராட்டுகள். உங்களது உழைப்பு அமரன் படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

எப்போதும் நிலைத்திருக்கும்: சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவிக்கு என் நன்றிகள். சில நடிப்புகள் விருதுகளையும் தாண்டியவை. அமரன் படத்திற்கு உண்மையான, அழகான மற்றும் அழுத்தமான நடிப்பைக் கொடுத்ததற்கு நன்றி. மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் இந்து ரெபேக்காவாக நீங்கள் இருவரும் நடித்தது இந்திய சினிமா வரலாற்றில் எப்போதும் நிலைத்திருக்கும்.

Advertisement

வீரமும் தியாகமும்: அமரன் திரைப்படம் பெறும் ஒவ்வொரு விருதும் அங்கீகாரமும் மேஜர் முகுந்த் வரதராஜனின் வீரத்தையும் தியாகத்தையும் என்றென்றும் அழியாமல் மாற்றுகிறது. கடந்த 46 ஆண்டுகளாக, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தரமான சினிமாக்களை ஆதரித்து வருகிறது. இந்தத் தேசிய விருதுகள், மகிழ்ச்சியையும் பெருமையை மட்டுமல்ல, உண்மையான இந்தியக் கதைகளைத் தரமாகச் சொல்வதில் எங்களுக்கிருக்கும் கடமையை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன" என குறிப்பிட்டிருக்கிறர்.

அதேபோல், மகேந்திரன் கூறுகையில், "2016-ல், விஜய் டிவிக்காக 'முதல் மரியாதை - சல்யூட் டூ த இந்தியன் ஆர்மி' என்ற நிகழ்ச்சியைத் தயாரித்தபோது, மேஜர் முகுந்த் வரதராஜனின் கதையை நான் முதன்முதலில் தெரிந்துகொண்டேன். அவரது வீரம், திருமதி. இந்துவின் அமைதியான மனவலிமை மற்றும் நம் ராணுவ வீரர்களின் குடும்பங்கள் செய்த தியாகங்கள் என் மனதை விட்டு நீங்கவே இல்லை.

Advertisement

ராணுவ சீருடைக்கு பின்னால் இருக்கும் மனிதரைப் பற்றி ஒவ்வொரு இந்தியரும், முக்கியமாக ஒவ்வொரு குழந்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த கதையை 'அமரன்' படம் மூலம் சொல்ல 2024-ல் முடிவு செய்தோம். அமரன் திரைப்படம் இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரமான மூன்று தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளது. சில பயணங்கள் திரைப்படமாகத் தொடங்கும். ஆனால் சில பயணங்கள் நம் இதயத்திற்கு மிக நெருக்கமானதாக மாறும். அமரன் அப்படிப்பட்ட ஒரு பயணம். அமரன் குழுவை நினைத்து மிகவும் நெகிழ்ச்சியாகவும், நன்றியுடனும், பெருமையாகவும் இருக்கிறது" என குறிப்பிட்டிருக்கிறார்.