எனக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக ஓடி வருபவர் கே எஸ் ரவிக்குமார்!

சென்னை: இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் முன்னணி இயக்குனராக மட்டுமல்லாமல் இப்பொழுது நடிகராகவும் கலக்கி கொண்டுள்ளார்

ரவிக்குமார் சரத்குமார் கூட்டணியில் நட்புக்காக, நாட்டாமை, சேரன் பாண்டியன், புரியாத புதிர் என பல வெள்ளிவிழா கண்ட படங்கள் தமிழ் சினிமாவில் கலக்கியுள்ளன.

சினிமாவையும் தாண்டி கே எஸ் ரவிக்குமார் எனக்கு ஒரு உதவி என்றால் முதல் ஆளாக வரக்கூடியவர் என சரத்குமார் நெகிழ்ந்து பேசியுள்ளார்.

வெப் சீரிஸ்களிலும் கவனம்

வெப் சீரிஸ்களிலும் கவனம்

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சரத்குமார் இப்பொழுது வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை தொடர்ந்து புதிய சீரிஸிலும் சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார் அதன் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

சரத்குமாருக்கு கேஎஸ் ரவிக்குமார்

சரத்குமாருக்கு கேஎஸ் ரவிக்குமார்

ஆரம்ப காலகட்டங்களில் வில்லனாக தோன்றி படிப்படியாக ஹீரோவாக நடித்த சரத்குமாருக்கு பல வெள்ளிவிழா வெற்றிகண்ட படங்களை கொடுத்தவர் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார். புரியாத புதிர் மூலம் இணைந்த சரத்குமார் கேஎஸ் ரவிக்குமார் கூட்டணி அதைத் தொடர்ந்து சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக,பாட்டாளி, சமுத்திரம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்கள் இவர்களது கூட்டணியில் வெளியானது. நாட்டாமை திரைப்படம் இன்றளவும் தமிழ் சினிமாவில் அனைவராலும் ரசிக்கக் கூடிய ஃபேவரைட் படமாக இருந்து வருகிறது

முதன்மை கதாபாத்திரத்தில்

முதன்மை கதாபாத்திரத்தில்

கேஎஸ் ரவிக்குமார் முன்னணி இயக்குனராக இருக்கும் போதே நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தை கேஎஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் இயக்கியிருக்கிறார்கள். கேஎஸ் ரவிக்குமார் இந்த படத்தை தயாரித்தும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார். மிக விரைவிலேயே கூகுள் குட்டப்பன் படம் ரிலீஸாக உள்ளது

கேஎஸ் ரவிக்குமார் சரத்குமாருக்கு உதவி

கேஎஸ் ரவிக்குமார் சரத்குமாருக்கு உதவி

திரைத்துறையில் சினிமாவையும் தாண்டி இன்றும் பலர் நீண்டகால நண்பர்களாக உள்ளனர் அதில் மிக முக்கியமானவர்கள் கேஎஸ் ரவிக்குமாரும் சரத்குமாரும். ஒன்றாக பல படங்களில் பணியாற்றியது மட்டுமல்லாமல் நிஜவாழ்க்கையிலும் உண்மையான நண்பர்களாக இருந்து வரும் கேஎஸ் ரவிக்குமார் சரத்குமாருக்கு ஒரு உதவி என்றால் முதல் ஆளாக வந்து நிற்பாராம் . அது எந்த ஒரு உதவியாக இருந்தாலும் சரி எந்த வேலையில் இருந்தாலும் சரி அந்த வேலையை விட்டுவிட்டு நான் அழைத்தால் வந்து நிற்பவர் கேஎஸ் ரவிக்குமார் அப்படி ஒரு நட்பு எங்களுக்குள் என சரத்குமார் கேஎஸ் ரவிக்குமார் உடனான நட்பை நெகிழ்ந்து கூறியுள்ளார். கேஎஸ் ரவிக்குமாரை தொடர்ந்து விஜயகாந்தும் அதேபோல சரத்குமாருக்கு ஒரு உதவி என்றால் கொஞ்சமும் யோசிக்காமல் உடனே வந்து விடுவாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X