சென்னை: ஜன நாயகன் படத்துக்கு சென்சார் கிடைத்து விட்டது என்கிற செய்தியைக் கூட இன்னமும் கேவிஎன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. சென்சார் சான்றிதழை அதன் வெப்சைட்டில் இருந்தே தளபதி ரசிகர்கள் எடுத்து அறிவித்து விட்டனர். மேலும், சென்சார் கட்ஸ் குறித்த தகவல்களும் வெளியாகி விட்டன.

Advertisement

ஜன நாயகன் படத்துக்கு 'ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது என்றும் வரும் ஜூலை 24ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என ஓவர்சீஸ் டிஸ்ட்ரிப்யூட்டரான அஹிம்சா எண்டர்டெயின்மென்ட் அறிவித்து வெளிநாடுகளில் உள்ள விஜய் ரசிகர்கள் கொண்டாட்ட மோடுக்கு கொண்டு வந்துவிட்டது.

Advertisement

Photo Credit:

ஆனால், இங்கே இன்னமும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் ஜன நாயகன் சென்சார் பற்றியோ, ரிலீஸ் குறித்தோ எந்தவொரு அறிவிப்பும் வெளியிடாமல் அமைதி காப்பது ஏன்? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

ஆட்டத்தை ஆரம்பித்த அஹிம்சா: ஏற்கனவே ஜன நாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் என நம்பிக்கொண்டு இங்கிலாந்தில் டிக்கெட் புக்கிங்கை ஆரம்பித்து ஓவர்சீஸில் அதிகபட்சமாக 60 கோடி வரை ப்ரீ புக்கிங் வசூலை பண்ணார்கள். ஆனால், கடைசியில் தணிக்கை வாரியம் வைத்த ஆப்பு காரணமாக டிக்கெட் காசுகளை திருப்பிக் கொடுக்கும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், ஜன நாயகன் சான்றிதழ் கிடைத்து விட்ட நிலையில், அஹிம்சா நிறுவனம் ஜன நாயகன் ரிலீஸ் ஆட்டத்தை தொடங்கி விட்டது. வரும் ஜூலை 24ம் தேதி படம் ரிலீஸ் என்றும் அறிவித்துள்ளனர்.

Advertisement

கம்முன்னு இருக்கும் கேவிஎன்: கடைசியாக யஷ் நடித்த டாக்ஸிக் படத்தின் தபாஹி பாடலை வெளியிட்ட கேவிஎன் நிறுவனம் இன்று பாலன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வருவதாக ட்வீட் போட்டுள்ளது. ஆனால், இதுவரை ஜன நாயகன் படத்துக்கு சான்றிதழ் கிடைத்தது குறித்தோ? படம் எப்போது ரிலீஸ் என்பது குறித்தோ எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் கம்முன்னு இருப்பது நல்லது கிடையாது என விஜய் ரசிகர்கள் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர். ஜன நாயகன் திரைப்படம் திட்டமிட்டப்படி ஜூலை 24ம் தேதி வெளியாகுமா? அல்லது தள்ளிப் போகுமா? என்பது இன்னமும் உறுதியாகவில்லை.