சென்னை: தமிழ் சினிமாவின் டாப் இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். கடைசியாக அவர் இயக்கிய கூலி திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவிருக்கிறார். இதற்கிடையே ஹீரோவாக நடித்திருக்கும் லோகி; ஜி ஸ்குவாட் என்ற கம்பெனியை ஆரம்பித்து தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்திருக்கிறார்.
மாநகரம், கைதி, விக்ரம், மாஸ்டர் என வரிசையாக நான்கு படங்களை சூப்பர் டூப்பர் ஹிட்டாக கொடுத்தார் லோகேஷ் கனகராஜ். விக்ரம்வரைக்குமே அவரது மேக்கிங் பெரும்பாலானோரால் ரசிக்கப்பட்டது. மேலும் எல்சியூ, ரெட்ரோ பாடல்கள் என சில விஷயங்கள் அவரது படங்களை கரை சேர்த்தன. ஆனால் அதே ஃபார்முலாவை தொடர்ந்து பயன்படுத்தப்படுவது ரசிகர்களிடையே கொஞ்சம் அதிருப்தியை கொடுத்தது. அந்த அதிருப்தியின் வெளிப்பாடு லியோ, கூலி ஆகிய படங்களில் ரொம்பவே தென்பட்டது.
கூலியிலும் அடி: லியோ படத்தின் தோல்வியை கூலியில் சரி செய்வார் என்று கணித்திருந்தார்கள். ஆனால் கூலியும் வழக்கமான லோகேஷ் ஃபார்முலாவில் வர; ரசிகர்கள் கொந்தளிப்பின் உச்சத்துக்கே சென்று படத்தை படுதோல்வியடைய செய்தார்கள். ரஜினி 74 வயதிலும் போட்ட முழு உழைப்பும் வீணாகிப்போனது. கண்டிப்பாக ஆயிரம் கோடி ரூபாயை அந்தப் படம் அள்ளிவிடும் என்றுதான் எல்லோருமே நினைத்தார்கள். ஆனால் அதன் உண்மையான வசூல் போட்ட பட்ஜெட்டைகூட எடுக்கவில்லை என்பதுதான் ஒருதரப்பினரின் ஆணித்தரமான கருத்து என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த படங்கள்: லியோ, கூலி கொடுத்த தோல்வி கண்டிப்பாக லோகேஷின் அடுத்தடுத்த படங்களில் பாடம் கற்றுக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இப்போது அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படம் இயக்கிவருகிறார். இந்தப் படத்தையாவது வெற்றி படமாக கொடுப்பாரா என்ற கேள்வி லோகேஷ் ரசிகர்களிடையே பலமாகவே எழுந்திருப்பதை சோஷியல் மீடியாக்கள் மூலம் பார்க்க முடிகிறது.
புதிய அவதாரங்கள்: இயக்குநராக மட்டும் ஓடிக்கொண்டிருந்த அவர்; அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். விரைவில் அந்தப் படம் ரிலீஸாகவிருக்கிறது. மேலும், ஜி ஸ்குவாட் என்ற பெயரில் கம்பெனியை ஆரம்பித்து படங்களையும் தயாரித்துவருகிறார். அந்தவகையில் அவர் இப்போது மிஸ்டர் பாரத் என்ற படத்தை தயாரித்திருக்கிறார். படத்தை நிரஞ்சன் என்பவர் இயக்கியிருக்கிறார்.
சூப்பர் ப்ரோமோ வீடியோ: இந்நிலையில் மிஸ்டர் பாரத் படத்தின் ரிலீஸ் தேதிக்கான ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோ செம ஃபன்னாக இருக்கிறது. அதுமட்டுமின்றி ப்ளடி பெக்கர் படத்தை தயாரித்தபோது அந்தப் படத்துக்கு நெல்சன் எப்படி ப்ரோமோ வீடியோவை செய்திருந்தாரோ; கிட்டத்தட்ட அதே கான்செப்ட்டில்தான் இந்த வீடியோவும் உருவாகி ரசிக்கும்படி இருக்கிறது. படமானது அக்டோபர் ஒன்றாம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.
More Articles
- ஜி.டி. நாயுடு பயோபிக் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு.. லோகேஷ் கனகராஜ் உடன் மோதும் மாதவன்!
- தளபதி டேக் ஓவர்.. சன் பிக்சர்ஸின் ‘டிசி’ பட ரிலீஸ் தேதியும் தள்ளிப்போயிடுச்சே.. எப்போ தெரியுமா?
- CM விஜய் மகனுடன் மோதும் லோகேஷ் கனகராஜ்.. ஆரம்பமே அடிதடியாதான் இருக்கும் போலயே.. DC ரிலீஸ் தேதி அறிவிப்பு!
- லோகேஷ் கனகராஜின் எல்சியூவில் ரவி மோகன்.. வரவேற்புலாம் பலமாக இருக்கே
- முதலமைச்சர் விஜய்யை சந்தித்த லோகேஷ் கனகராஜ்.. லியோ 2 படத்தை லாக் பண்ணி விடுண்ணே.. ரசிகர்கள்!
- கெட்ட வார்த்தை.. மொத்த டிரைலரும் மியூட்.. லோகேஷின் ‘டிசி’ சர்ச்சை கிளப்பும் டிரைலர்!