சென்னை: 25 கோடி பட்ஜெட்டில் தனுஷ் இயக்கத்தில் பவிஷ் அறிமுகமான 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படம் அதிகபட்சமாக 9 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூல் செய்து ஃப்ளாப் ஆனதாக சாக்னிக் உள்ளிட்ட பாக்ஸ் ஆபிஸ் தளங்கள் தகவல் தெரிவித்து இருந்தன.

Advertisement

இந்நிலையில், தனுஷின் மருமகனான பவிஷ் நடித்துள்ள 2வது படமான லவ் ஓ லவ் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

16 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் அதர்வா முரளி நடித்த 'இதயம் முரளி' படத்துக்கே முதல் நாளில் 2 கோடி அளவுக்குத்தான் ஓபனிங் உள்ளது. இந்நிலையில், பவிஷ் நடிப்பில் வெளியான லவ் ஓ லவ் நிலைமை ரொம்பவே கவலைக்கிடமான சூழலில் இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யாருமே கண்டுக்கல: மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று வெளியான லவ் ஓ லவ் படத்தை தியேட்டரில் சென்று பார்க்கும் அளவுக்கு ரசிகர்கள் பெரிதாக ஆர்வம் செலுத்தவில்லை என்பது முதல் நாள் வசூல் குறித்த தகவல் மூலமாக வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. கரூரில் நேற்று முதலமைச்சர் விஜய் மீண்டும் சென்று மக்களை சந்தித்த நிலையில், இதயம் முரளி, லவ் ஓ லவ், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு என எந்த படத்தையும் இந்த வாரம் ரசிகர்கள் பெரிதாக தியேட்டருக்குச் சென்று முதல் நாளில் பார்க்கவில்லை என்கின்றனர். அதர்வா படத்துக்கு மட்டுமே ஓரளவுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

லவ் ஓ லவ் முதல் நாள் வசூல்: பவிஷ் மற்றும் அவரது மாமா செல்வராகவன் நடிப்பில் வெளியான லவ் ஓ லவ் திரைப்படம் முதல் நாளில் வெறும் 15 லட்சம் மட்டுமே தமிழ்நாட்டில் வசூல் செய்ததாக சாக்னிக் வெப்சைட் தகவல் வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பி உள்ளது. கென் கருணாஸின் யூத் படம் போல பவிஷுக்கு இந்த படமாவது கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படமும் ஓபனிங் பெரிதாக வசூல் செய்யவில்லை. சனி மற்றும் ஞாயிறு ஓரளவுக்கு பிக் அப் ஆனால் தான் உண்டு என்கின்றனர்.