சென்னை: நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த சமந்தா அவரை பிரிந்துவிட்டார். அதன் பிறகு இயக்குநர் ராஜ் நெடிமோருவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இப்போதும் சினிமாவில் பிஸியாக நடித்துவரும் அவர்; கடைசியாக மா இன்ட்டி பங்காரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அதன் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வந்திருக்கிறது.

Advertisement

தமிழ்நாட்டை சேர்ந்த சமந்தாவுக்கு; திருமண வாழ்க்கை முதலில் ஒழுங்காக அமையவில்லை. நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு சில வருடங்கள் வாழ்ந்த அவர்; பிறகு விவாகரத்து செய்துவிட்டார். அந்த சமயம் பார்த்து அவருக்கு மையோசிடிஸ் நோய் வர; மனநிலையோடு சேர்ந்து உடல்நிலையும் சோர்வடைந்தது. உடனடியாக வெளிநாடுகளுக்கு சென்று அதற்கான சிகிச்சை செய்து மீண்டார். குஷி, சாகுந்தலம் படங்களிலும், சிட்டாடல் வெப் சீரிஸிலும் அவர் நடித்தார்.

Advertisement

Photo Credit:

இரண்டாவது திருமணம்: அந்த வெப் சீரிஸை இயக்கியவர்களில் ஒருவர் ராஜ் நெடிமோரு. அவருக்கும், சமந்தாவுக்கும் காதல் வேறு மலர்ந்திருந்தது. எனவே பெரிய அளவில் கூட்டத்தை சேர்க்காமல் சிம்ப்பிளாக கோவை ஈஷா யோகா மையத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். இரண்டு பேருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் மண வாழ்க்கை போல் இல்லாமல் இது ரொம்பவே சந்தோஷமாகவும், அமைதியாகவும் அவர்களுக்கு செல்கிறது.

நடிப்பில் பிஸி: திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடித்துவருகிறார். அந்தவகையில் கடைசியாக மா இன்ட்டி பங்காரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். சிட்டாடல் மாதிரியே இதிலும் ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பியிருந்தார் சாம். தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் படம் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இங்கேயும் ஓரளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கவே செய்தது. ஆகமொத்தம் கடந்த சில வருடங்களாக இறங்கியிருந்த சமந்தாவின் மார்க்கெட்டை இப்படம் கொஞ்சம் உயர்த்திவிட்டிருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.

Advertisement

கர்ப்பமாக இருக்கும் சமந்தா: அதேபோல் இப்படம் சமந்தாவின் வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் இப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தின்போதுதான் சாம் கர்ப்பமாக இருக்கிறார் என்பதும் உறுதியானது. முதலில் லேசாக உப்பிய வயிறை வைத்து ரசிகர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். இனிமேல் அவர்களிடம் மறைக்க முடியாது என்பதை தெரிந்துகொண்டு; தன்னுடைய கர்ப்பத்தை வெளியே அறிவித்தார். மேலும், மகப்பேறு விடுமுறையில் செல்லவிருப்பதாகவும் தெரிவித்தார். அதேசமயம், சோனி லிவ் ஓடிடி தளத்துடனும் கை கோர்த்திருக்கிறார். அநேகமாக குழந்தை பெற்ற பிறகு அந்த ப்ராஜெக்ட்டில் வேலை செய்வார் என்று தெரிகிறது.

படத்தின் அதிகாரப்பூர்வ வசூல்: இந்நிலையில் மா இன்ட்டி பங்காரம் திரைப்படம் சமந்தாவுக்கு இன்னொரு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. அதாவது இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது. இப்போது அப்படம் நூறு கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது. கர்ப்பமான சந்தோஷத்தோடு இதுவும் டபுள் சந்தோஷமாக அனுபவித்துவருகிறார் சமந்தா.